துருக்கி இஸ்ரேலுக்கு உதவியது துரோகமா?1.நபியவர்கள் முனாபிக்குகளின் தலைவனுக்கு ஜனாஸா தொழுகை நடாத்தினார்கள். தனது வாயில் எச்சிலை முனாபிக்குகளின் தலைவரின் வாயில் வைத்து பின்னர் முன்னால் நின்று முனாபிக்குகளின் தலைவருக்கு தொழுகை நடாத்தினார்கள்.

2. ஒரு முறை  ஒரு யூதனின் பூதஉடல் கொண்டு செல்லப்படும் போது
அதற்காக நபியவர்கள்நபியவர்கள் எழுந்து நின்றார்கள் பக்கத்திலிருந்து ஸஹாபாக்கள்யா  ரசூலுல்லாஹ்  அது யூதன் ஒருவருடைய பிரேதம் என்றார்கள். அதற்கு நபியவர்கள் அவனும் இந்த உலகில் வாழந்த ஒரு மனிதன் தான் என்றார்கள்.

3. காபிர்கள் மக்காவை ஆட்சி செய்யும் போது ஒரு முறை மக்காவில் கடும் பஞ்சம் ஒன்ற ஏற்பட்டது மக்காவிலிருந்;து துரத்தப்பட்டு மதீனாவில் வாழ்ந்த நபியவர்கள் உடனே எல்லோரிடம் பணம் சேர்த்து
அதனை அபூசுப்யானிடம் கொடுங்கள் என்று மக்காவுக்கு அனுப்பினார்கள்.
மக்கா காபிர்களுக்கு உதவவே நபியவர்கள் அந்த பணத்தை அனுப்பியிருந்தார்கள்.


4.நபிகளாரின் சாச்சாவின் நெஞ்சை பிழந்து அவரின் ஈரலை எடுத்து
சப்பித் துப்பிய பெண்ணை நபியவர்கள் மன்னித்துவிட்டார்கள்நபிகளாரின் சாச்சாவின் நெஞ்சை பிழந்து அவரின் ஈரலை எடுத்து
சப்பித் துப்பிய பெண்ணை நபியவர்கள் மன்னித்துவிட்டார்கள்.

5. இது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த உதாரணம் உதைபியா உடன்டிக்கை

யூதர்களுடன் மாத்திரமல்ல முனாபிக்குகளுடன் கூட எந்தளவு நுணுக்கமாக மற்றும் மனிதாபிமானமாக நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதனை இந்த ஹதீஸ்களுடாக புரிந்துகொள்ளலாம்

இஸ்ரேலில் பல நகரங்களில் கடுமையான தீ பரவி வருகிறது.
அதனை அணைக்க இஸ்ரேல் சர்வதேச நாடுகளின் உதவியை கோரியுள்ளது.
இஸ்ரேலுக்கு உதவ துருக்கி முன்வந்துள்ளது.

இதனை தொடர்ந்து துருக்கி தலைவர் அர்துகான் மீது பலரும் வசைபாட துவங்கியுள்ளனர்.

அர்துகான் யூத ஏஜன்ட்.
அர்துகான் ஒரு துரோகி என்றெல்லாம்
சில அரைவேக்காட்டு உலறல்வாதிகள் உலறிக்கொண்டிருக்கின்றனர்.

நான் மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களில் வரும் சம்பவங்கள்
நபிகளார் மனித உயிர்களுக்கு எந்தளவுக்கு மதிப்பளித்துள்ளார்கள்.

சூழலை கருத்தில் கொண்டு முனாபிக்குகளுடன் கூட எந்தளவுக்கு இறங்கிச் சென்று  நடந்துகொண்டுள்ளார் என்பதனை தெளிவாக உணரலாம்.

இன்னும் பல பல உதாரணங்களை சீராவிலிருந்து காட்டலாம்
துருக்கி அரசை இந்த விடயத்தில் மட்டும் விமர்சிக்கும் இவர்கள்
துருக்கி கடந்த 15 வருடகாலமாக செய்து வரும் சமூகப் பணியை
சாதனைகளை ஒரு முறை கூட வாய் திறந்து பாராட்டியதில்லை.

இத்தனைக்கும் முஸ்லிம் நாடு என்று சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளக் கூடிய நிலையில்

இருக்கும் ஒரேயொரு முஸ்லிம் நாடு துருக்கி தான்.

ஜரோப்பாவின் துயரம் என்றழைக்கப்பட்ட நாடு இன்று ஜரோப்பாவில் முதலிடம் வகிக்கும் நாடாக மாறியிருக்கிறது.

இதற்கு அர்துகானின் பங்களிப்பு மிகப்பிரதானமானது.

ஜரோப்பாவின் துயரம் என்றழைக்கப்பட்ட நாடு இன்று ஜரோப்பாவில் முதலிடம் வகிக்கும் நாடாக மாறியிருக்கிறது. இதற்கு அர்துகானின் பங்களிப்பு மிகப்பிரதானமானது.

எந்த முஸ்லிம் நாடும் முன்வந்து செய்யாத
துருக்கியின் சமூகப் பங்களிப்புகள் சில

1. சில வருடங்களுக்கு முன் சோமாலியாவில் ஏற்பட்ட கடும் பஞ்ச கஷ்ட நிலைமை எல்லோருக்கும் நினைவிருக்கலாம்.
சபாப் என்ற ஆயுதக்குழுவுக்கு பயந்து உலகநாடுகள் சோமாலிய சென்று உதவிகளை வழங்க பின்வாங்கின.

ஆனால் துருக்கி முன்வந்து துருக்கி தலைவர் முன்வந்து தனது மனைவியையும் அழைத்துக் கொண்டு சோமாலியா சென்று அந்த மக்களின் துயரத்தில் பங்கு கொண்டு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார்கள். பலர் வேண்டாம் என்று சொன்னாலும் சோமாலியாவில் துருக்கி தமது தூதரகத்தை அங்கு அமைத்து அவதிப்பட்ட அந்த மக்களுக்கு துருக்கி உதவியது.

2. சில வருடங்களுக்கு முன்னர் மிய்னமாரில் முஸ்லிம்கள் ஒடுக்ப்பட்டு முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டது நினைவிருக்கும் அந்த நேரத்திலும் மியன்மாருக்கு துருக்கி தலைவரின் பாரியாரும் வெளிநாட்டு அமைச்சரும் நேரடியாக சென்று அவர்களுக்கு கண்ணீர் சிந்தி உதவிக்கரம் நீட்டினார்கள்.
அர்துகானை பார்த்து துரோகி என்று சொல்வோரிடன் ஒரு சிறிய கேள்வி
மியன்மார் அரசின் கொடுமை தாங்காமல் அங்கிருந்து தப்பி வந்த படகு ஒன்று கிழக்கு மாகாணத்தை வந்தடைந்தது. உயிரையும் கொடுப்போம் என கூச்சலிடும் உங்களில் எத்தனை பேர் குறைந்தது அங்கு சென்றாவது அவர்களை பார்த்து சுகம் விசாரித்தீர்கள்.

உங்களுக்கு என்ன தகுதியிருக்கிறது அர்துகானை பார்த்து துரோகி என்று சொல்ல.

3.சிரியா யுத்தம் உக்கிரமாக நடந்து வருகிறது அங்கிருந்து இடம்பெயர்ந்து வரும் 20 லட்சத்தையும் விட அதிகமான அகதிகளுக்கு இன்று வரை உணவளித்து பராமரித்து வருகிறது துருக்கி.
துருக்கியின் சமூகப்பணிகளை இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம் அதில் ஒரு சிலவற்றை மட்டும் சுருக்கமாக இங்கு பதிந்துள்ளேன்.
அடுத்தது இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையிலான ஒப்பந்தம் இன்று நேற்று உருவானதல்ல. அதாதுர்க் காலத்திருலிருந்து உருவானவை.
அன்றைய துருக்கியில் ஹிஜாப் அணிந்ததற்காக பெண்கள் தூக்கிலடப்பட்டார்கள். இன்னும் பலர் நாடு கடத்தப்பட்டார்கள். ஏன் துருக்கியில் ஆண்களுக்கு தாடி வைப்பது கூட சட்டரீதியாக தடைசெய்யப்பட்டிருந்தது. அப்படி பட்ட துருக்கி தான் இன்று சர்வதேச சதிகளின் பிடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கிறது.
முழுமையாக மீள இன்னும் பல காலம் எடுக்கும்.

ஒரே நாளில் நாட்டை மாற்றி மக்கள் அனைவர்களையும் மாற்ற
இது ஒன்று தமிழ் சினிமா அல்ல. இது நிஜம் யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

இந்தப் பதிவின் நோக்கம் துருக்கி இஸ்ரேலுக்கு உதவியது மார்க்கரீதியாக பிழையானதல்ல துரோகமும் அல்ல அதனை மனிதாபிமான பணி என்ற ரீதியிலேயே பார்க்க வேண்டும். அரசியல்ரீதியாகவும் அது தவிர்க்க முடியாதது. எனபதனை உணர்த்துவதே.

நாம் இந்த நிலைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு துருக்கியின் வரலாற்றையும் ஓரளவுக்காவது படித்து விட்டுத்தான்
துருக்கி துரோகம் செய்யததா அல்லது சர்வதேசத்தில் இஸ்லாத்தின் முன்மாதிரியை நடைமுறைபடுத்திக் காட்டி இஸ்லாத்தை தலைநிமிர வைத்ததா என்ற முடிவுக்கு வரவேண்டும்.

இதுவரை காலம் அர்தூகானின் முன்னெடுப்புகள் அனைத்தும் இஸ்லாத்துக்கு பெருமை தேடித் தருவதாகவே அமைந்திருக்கிறது. இதுவும் அப்படியான ஒரு முன்னெடுப்புதான்.

ஏற்கனவே இந்தப் பதிவு நீண்டதாகிவிட்டதாக தோன்றுகிறது. மீண்டும் சொல்கிறேன் இது துருக்கியின் பணிகளில் மிகவும் சொற்பனளவையே.
இஸ்லாம் அமைதியின் மார்க்கம்
இஸ்லாம் அமைதியையே விரும்புகிறது
இஸ்லாம் யுத்தங்களை வெறுக்கும் மார்க்கம்

யுத்தமில்லாத ஒரு அமைதிப்பூங்காவாக இந்த பூமியை மாற்றவே
இஸ்லாம் விரும்புகிறது.*

முழு வாழ்வும் இரத்தமும் யுத்தமும் மரணமும்தான் இஸ்லாம்
என நாம் இஸ்லாத்தை தவறாக புரிந்து வைத்துள்ளோம்.

இஸ்லாத்தின் அந்த உயரிய இலக்கை நோக்கிய பயணமாகத்தான்
துருக்கியின் நிலைப்பாட்டை  நான் இங்கு பார்க்கிறேன்.

ஏ.ஆர்.எம். இனாஸ்
மடவல நியூஸ்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.