சுஷ்மாவுக்கு கிட்னி தானம் தர முன்வந்த முஸ்லிம் இளைஞர்கள்மத்திய பா.ஜ.க அரசு பொதுசிவில் சட்டப் பிரச்சினையிலும், டாக்டர் ஜாகிர் நாயக் பிரச்சினையிலும், இன்னும் பல பிரச்சினைகளிலும் அறிவிக்கப்படாத போரை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தி வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்குப் முன்பு

 பா.ஜ.க வைச் சார்ந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனக்கு கிட்னி செயலழிந்ததாக அறிவித்திருந்தார்.

அவருக்கு உத்தர பிரதேசத்தைச் சார்ந்த முஜிப் அன்சாரி, நியமத் அலீ ஷேக், ஜான் ஷாஹ் ஆகியோர் தமது கிட்னிகளை தானமாக தர முன்வந்துள்ளனர்.

முன்னதாக முஜீப் அன்சாரி தமது ட்விட்டர் கணக்கில் கூறியதாவது, “மேடம்! நான் முஸ்லிம். அத்துடன் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவாளர். நீங்கள் விரும்பினால் எனது இரண்டு கிட்னிகளையும் உங்களுக்குத் தர தயாராக உள்ளேன்.

நீங்கள் எனக்கு அம்மாவைப் போன்றவர். அல்லாஹ்வின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.”

தனக்கு கிட்னி தானம் தர முன்வந்த முஸ்லிம் இளைஞர்களுக்கு சுஷ்மா நன்றி தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் மத நல்லிணக்கமும் மனிதநேயமும் மிக்கவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிலைநாட்டி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.