உலகிற்கு இஸ்லாத்தை பிழையாக காட்டும் மூட நம்பிக்கை கொண்ட சில முஸ்லிம்கள்.!இந்தியாவில் மதத்தை காரணம்காட்டி குழந்தைக்கு தாய்ப்பால் தர எதிர்ப்பு தெரிவித்த கேரளாவைச் சேர்ந்த அபூபக்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த அபூபக்கரின் மனைவிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அப்போது மருத்துவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

ஆனால் அபூபக்கரோ தம்முடைய மதத்தில் தாய்ப்பால் கொடுக்க அனுமதியில்லை; மெக்காவில் இருந்து கொண்டுவரப்படும் தேனும் புனித நீரும் போதுமானது என மதபோதகர்கள் கூறியிருப்பதாக வாதிட்டிருக்கிறார். மருத்துவர்களோ தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இருப்பினும் அபூபக்கர் விடாப்பிடியாக இருந்ததுடன் உடனே மருத்துவமனையில் இருந்து மனைவியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார்.

இது தொடர்பாக கோழிக்கோடு போலீசில் மருத்துவர்கள் புகார் செய்தனர். இதனையடுத்து அபூபக்கர், அவரது மனைவி மீது கோழிக்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது அபூபக்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.