முத்துப்பேட்டை பகுதியில் சுகாதாரம் குறித்து எம்.எல்.ஏ ஆடலரசன் திடீர் ஆய்வு
முத்துப்பேட்டையில் சுகாதார சீர்க்கேடு..
விதவிதமான சொசுக்கள் உற்பத்தியால் பலருக்கு மர்ம காய்ச்சல்!
உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கொசுக்களை ஒழிக்கவேண்டும்!!   எம்.எல்.ஏ ஆடலரசன்  நகரை ஆய்வு செய்தபின்  கோரிக்கை..

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் பேரூராட்சி நிர்வாகத்தால் சமீபக்காலமாக குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் சரிவர அகற்றப்படுவதில்லை. இதனால் நகரம் முழுவதும் ஆங்காங்கே சாலைகளில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. கழிவுப் பொருட்கள் பல இடங்களில் கிடந்து அசுத்தமான காட்சி அளிக்கிறது. மேலும் சாக்கடை கால்வாய்களையும் சுத்தம் செய்யாததால் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முத்துப்பேட்டை முழுவதும் விதவிதமான கொசுக்கள் உற்பத்தியாகி இரவு பகல் பாராமல் பொதுமக்களை கடித்து துன்புறுத்தி வருகிறது. இதன் மூலம் பலருக்கு மர்ம காய்ச்சல் போன்ற பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் பொது மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக முத்துப்பேட்டை அக்காஸ் தெருவை சேர்ந்த சுபியா பானு(7) மற்றும் அல்சாப்(5) என்ற சிறுமிகளுக்கும், அதேபோல் பக்கிரிவாடி தெருவை சேர்ந்த சாஜித்(3), மற்றும் ஜாகித்(6) ஆகிய சிறுவர்களுக்கும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.

இந்தநிலையில் நேற்று இச்சம்பவத்தை அறிந்து முத்துப்பேட்டைக்கு வந்த திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ ஆடலரசன், அசுத்தமாக குப்பைகள் மற்றும் கழிவுநீர்கள் தேங்கி இருக்கும் பகுதிகளை பார்வையிட்டார். அதேபோல் அதிகளவில் கொசு உற்பத்தியை ஏற்படுத்தி குப்பைகள் மற்றும் கழிவு பொருட்கள் குவிந்து சுத்தமாக இருக்கும் குண்டாங்குளம் மற்றும் கல்கேணி குளங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது எம்.எல்.ஏ ஆடலரசன் கூறுகையில்:

முத்துப்பேட்டை பகுதியில் குப்பைகள் மற்றும் கழிவு பொருட்கள் தேங்கி உள்ளதை சுட்டிக்காட்டியும், விதவிதமான கொசுக்கள் உற்பத்தியாகி வருவதையும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பேரூராட்சிக்கு சென்று நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தேன். ஆனால் இதுநாள்வரை குப்பைகள் மற்றும் கழிவு பொருட்கள் அகற்றுவதற்கும், கொசுவை ஒழிப்பதற்கான எந்தவித முயற்சியையும் பேரூராட்சி நிர்வாகம் செய்யவில்லை. யாராது பொதுமக்கள் பலியானால்தான் பேரூராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் கவனைத்தை திசைத்திருப்பும் என நினைக்க தோன்றுகிறது. இன்று முத்துப்பேட்டை முழுவதும் பல்வேறு பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டேன் எங்கும் சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள கொசு உற்பத்தியால் இன்றைக்கு இந்த கொசு கடித்து பலருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக பேரூராட்சி நிர்வாகமும், சுகாதாரத்துறை இனியும் காலத்தாமதம் படுத்தாமல் உடனடியாக கொசுக்களை ஒளித்தும்.. மேலும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார். அப்பொழுது முன்னாள் பேரூராட்சி தலைவர் எம்.எஸ்.கார்த்திக், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜாம்பை கல்யாணம், திமுக நகர துணைச்செயலாளர் சியா நவாஸ்கான், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜபருல்லா, ஜெயபுநிசா பகுருதீன், திமுக வார்டு செயலாளர் ரபி அகமது ஆகியோர் உடன் இருந்தனர்.
மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.