முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் மனுதாரர் மீதே புகார் பதிந்து போலீஸ் ரசீது உறவினர்கள் அதிர்ச்சிமுத்துப்பேட்டை காவல் நிலையத்தில் மனுதாரர் மீதே புகார் பதிந்து ரசீது வழங்கி போலீசாரால் மனைவி, உறவினர்கள்
அதிர்ச்சியடைந்தனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக இருப்பவர் மோகன். இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்ததும் மனைவி பாப்பாவுடன் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது உப்பூரை சேர்ந்த அசோகன் என்பவர் ஓட்டி வந்த பைக், மோகன் மீது உரசியது. இதுகுறித்து கேட்டபோது மோகனை அசோகன் தாக்கினார்.

படுகாயமடைந்த மோகன், முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அசோகனை, காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது போலீசாரிடம் துப்புரவு பணியாளர் மோகன் தன்னுடைய தங்க செயினை பறித்ததாக அசோகன் புகார் செய்தார். இந்நிலையில் முத்துப்பேட்ைட காவல் நிலையத்துக்கு வந்து தனது கணவரை தாக்கியவர் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம், எஸ்எஸ்ஐ மோகனிடம் பாப்பா கேட்டார். இதுகுறித்து புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மனு ரசீதை பாப்பாவிடம் கையெழுத்து வாங்கி கொண்டு போலீசார் கொடுத்தனர்.

பின்னர் போலீசார் கொடுத்த மனு ரசீதை உறவினர்களிடம் பாப்பா காட்டியபோது அதில் மோகனை தாக்கிய உப்பூர் அசோகன் பெயரில் புகார் பதிவு செய்து அதில் மனுதாரர் என்ற இடத்தில் அசோகன் என்றும், எதிர் மனுதாரர் மோகன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று முத்துப்பேட்டை காவல் நிலையத்துக்கு சென்று பாப்பா மற்றும் உறவினர்கள் கேட்டனர். அப்போது மனு ரசீதை மாற்றி கொடுத்துவிட்டோம் என்று கூறி சமாளித்து நாளை வாருங்கள் எப்ஐஆர் பதிவு செய்து உங்களுக்கு நகல் தருகிறோம். அசோகனை வழக்குப்பதிந்து கைது செய்து விடுகிறோம் என்று சமாளித்து அனுப்பினர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.