பள்ளிவாசல்களில் கூம்பு வடிவிலான ஒலிபெருக்கி தடைக்கு எதிர்ப்பு!கூம்பு வடிவிலான ஒலிபெருக்கியை அகற்றவேண்டும் என்ற காவல்துறையினரின் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் மனு அளித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் இருக்கும் கூம்பு வடிவிலான ஒலிபெருக்கியை அகற்றவேண்டும் என,  காவல்துறை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த உத்தரவை ரத்துசெய்ய வலியுறுத்தி,  சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர், நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

மேலும், கூம்பு வடிவிலான ஒலிபெருக்கிகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றும், ஒலிபெருக்கியின் அளவிற்குதான் கட்டுப்பாடுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே பள்ளி வாசல்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்த காவல்துறையினர் விதித்த தடையை, திரும்பப்பெற வேண்டும் எனவும் அபூபக்கர் வலியுறுத்தினார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.