ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டார் - தொண்டர்கள் ஆரவாரம்சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 58 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதா குணம் அடைந்ததை அடுத்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் முகத்தைப் பார்க்காத அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் இந்த செய்தியை கேள்விப்பட்டதில் இருந்தே உற்சாகமடைந்துள்ளனர். ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டது குறித்து கருத்து கூறியுள்ள பண்ருட்டி ராமச்சந்திரன், இந்த நாள் அதிமுகவினரின் வாழ்வில் மறக்கமுடியாத நாள் என்று கூறினர்.

மக்களின் பிரார்த்தனையால் முதல்வர் நலம் பெற்றுள்ளார் என்று செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறினார். அதேபோல செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், அம்மா குணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டது காதில் தேன் வந்து பாய்ந்தது போல் உள்ளதாக கூறினார்.
அப்பல்லோ மருத்துவமனை வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய சி.ஆர். சரஸ்வதி, இன்றுதான் எங்களின் தீபாவளி பண்டிகை, பொங்கல் பண்டிகை எல்லாம். மக்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை. அம்மா இதுவரை ஓய்வு எடுத்ததே இல்லை. இத்தனை நாள் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து விட்டார் விரைவில் மக்கள் பணியாற்றுவார். ஓய்வின்றி மக்களுக்கு பணி செய்வார் என்று சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.