இனி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நாம் எடுக்கலாம்!



நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு, வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தை எடுப்ப‌ற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் தற்போது வாரத்திற்கு ரூ.24,000 வரை எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த கட்டுப்பாடு காரணமாக வங்கியில் பணத்தை ‘டெபாசிட்’ செய்ய வாடிக்கையாளர்கள் தயங்கியதாக தெரியவந்தது. இதனையடுத்து வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவுக்கு ரிசர்வ் வங்கி வந்துள்ளது.

அதன்படி, இன்று முதல் தற்போது அமலில் இருக்கும் உச்சவரம்பைக் காட்டிலும் (ஒரு வாரத்திற்கு ரூ.24,000) அதிகமாக பணம் எடுக்க முடியும். அவ்வாறு அதிகமாக பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது புழக்கத்தில் உள்ள அதிகபட்ச மதிப்பு கொண்ட புதிய 500 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.