கல்ஹின்ன துப்பாக்கிச்சூடு ; மேலும் ஒரு சந்தேக நபர் கைது- - வீடியோகண்டி - அங்கும்புற பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்ஹின்ன, பெபிலகொல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


கைதுசெய்யப்பட்டவர் 23 வயதுடையவர் என்பதுடன், குறித்த நபர் ரணல பகுதியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரை இன்று கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், இன்று குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கல்ஹின்ன, பெபிலகொல்ல பகுதியில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டில்  ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.