ரிசானா நபீசிக்கு ஏற்பட்ட நிலைமை இனிமேல் எவருக்கும் ஏற்படக் கூடாது - அமைச்சர் தலதா அத்துகோரள
"பயிற்சி பெறாத எவரும் இனிமேல் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட மாட்டர்கள். ரிசானா நபீசிக்கு ஏற்பட்ட நிலைமை இனிமேல் எவருக்கும் ஏற்படக் கூடாது" என வெளிநாட்டு வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

வெளிநாடுகளில்  தொழில் புரியும் நபர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் இன்று காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.


கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் வெளிநாடுகளில் தொழில் புரிவோரின் பிள்ளைகள் 643 பேருக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. சுமார் 2 கோடி 45 இலட்சம் ரூபாய் புலமைப்பரிசிலாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய அமைச்சர், இந்த நாட்டில் காலம் காலமாக புரையோடிப்போயிருந்த இனவாதம் ஜனாதிபதி மைத்திபால மற்றும் பிரதம ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் நல்லாட்சியில் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.