துபாயில் நடந்த யுசிமாஸ் மனக்கணித போட்டியில் தமிழக மாணவர்களுக்கு பரிசு !துபாயில் நடந்த யுசிமாஸ் மனக்கணித போட்டியில் தமிழக மாணவர்கள் பரிசுகளை பெற்றனர்.

துபாயில் 21-வது சர்வதேச மனக்கணித போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பத்து பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மூவாயிரம் பேர் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து மட்டும் மொத்தம் 444 பேர் கலந்து கொண்டனர்.

பல்வேறு நிலைகளில் போட்டி நடைபெற்றது. போட்டியினை யுசிமாஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டாக்டர் டினோ விங் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் இருந்து யுசிமாஸ் மனக்கணித நிறுவனத்தின் அதிகாரி சென்னையைச் சேர்ந்த அப்ரார் அகமது தலைமையில் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.
ஒரு சில பிரிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பரிசினை பெற்றனர். இ பிரிவில் செங்கல்பட்டைச் சேர்ந்த அக்சய், சாசங் குமார் இரண்டாம் பரிசையும், கவுதம் ராவ், மேட்டுப்பாளையம் பிரணவ் சந்தர் ஆகியோர் மூன்றாம் பரிசையும், ஜெ பிரிவில் வேலூர் சத்துவாச்சேரி தீபன் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

சி பிரிவில் செங்கல்பட்டின் ஸ்ரீநிதி இரண்டாம் பரிசையும், கொளத்தூர் திவ்யா மூன்றாம் பரிசையும் பெற்றனர். ஜி பிரிவில் தூத்துக்குடி தக்னேஷ்வர் பொற்கோ மாரியப்பன் மூன்றாம் பரிசை பெற்றார். அவர்களுக்கு கோப்பையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், துணைத் தூதர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.