அதிரையில் பரபரப்பு! கனரா வங்கியை கண்டித்து ECR சாலையில் மக்கள் மறியல்! (படங்கள் இணைப்பு) கடந்த 8ந்தேதி இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும், 50 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளுக்கு திடீரென பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால் அன்றாட வாழ்க்கை நடத்தவே மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர். நேற்றும், இன்றும் ஏடிஎம் இயந்திரங்கள் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இன்று முதல் நாடு முழுவதும் உள்ள வங்கிகள், அஞ்சலக மையங்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு, பழைய நோட்டுகளுக்கு பதிலாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆகையால் மக்கள் வங்கிகளுக்கு சென்றே புதிய நோட்டுகளை வாங்கி வருகிறார்கள். இதன் காரணமாக நேற்று அதிரையில் வங்கிகள் மற்றும் அஞ்சலக மையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றது. இந்த நிலையில் அதிரை கனரா வங்கியில் மக்களுக்கு பணம் வழங்காமல் அலைக்கழிப்பதால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அதிரை ஈசிஆர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


படங்கள்: சேனா மூனா ஹாஜா முஹைதீன்
அதிரை நியூஸ்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.