பிஜேபி அரசுக்கு ஆதரவாக செயல் படாததால் NDTV யை தடை செய்தது மத்திய அரசு!பதான்கோட் தீவிரவாத தாக்குதலின்போது முக்கிய தகவல்களை ஒளிபரப்பிய ஹிந்தி செய்திச் சேனலான ‘என்.டி.டி.வி. இந்தியா’ -வுக்கு ஒரு நாள் ஒளிபரப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இதற்கான உத்தரவினை வெளியிட்டுள்ளது. கேபிள் டி.வி. முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ், வரும் 9ம் தேதி அன்று நாடு முழுவதும் ‘என்.டி.டி.வி. இந்தியா’ ஒளிபரப்ப தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி அன்று, பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு, ராணுவம் கொடுத்த பதிலடியில், தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலின்போது, இது குறித்து செய்தி வெளியிட்ட ‘என்.டி.டி.வி. இந்தியா’ முக்கிய தகவல்களை வெளியிட்டதாக மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

இதனிடையே, மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.