கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை அகற்றுவோம் என்ற பெயரில் மஸ்ஜித்களை குறிவைக்கும் காவல்துறை - PFI



கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை அகற்றுவோம் என்ற பெயரில் மஸ்ஜித்களை மட்டும் குறி வைப்பதை காவல் துறை நிறுத்த வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்!

கடந்த இரண்டு தினங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக முஸ்லிம்கள் தொழுகை நடத்தக்கூடிய மஸ்ஜித்களில் உள்ள கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி அகற்றும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வழிபாட்டு தளங்கள் உட்பட பொது இடங்களில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை பயன்படுத்துவது குறித்தான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில் காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும் மாசு கட்டுபாட்டு வாரியம் அனுமதித்த 70 டெசிபல் அளவிலான ஒலிப்பெருக்கியையே மஸ்ஜித்களில் பயன்படுத்தி வரும் வேளையில் ஒட்டுமொத்தமாக அனைத்து மஸ்ஜித்களிலும் ஒலிப்பெருக்கியை அகற்ற காவல்துறை முயற்சி செய்கிறது. எத்தனையோ வழிபாட்டு தளங்கள் இருக்கையில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தக்கூடிய மஸ்ஜித்களை மட்டும் குறிவைத்து  ஒலிப்பெருக்கிகளை அகற்ற முனைவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அனுமதிக்கப்பட்ட அளவில் ஒலிப்பெருக்கியை பயன்படுத்துவதை  தடுக்க நினைப்பது  முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் செயலாகும். எனவே கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை அகற்றுகிறோம் என்ற பெயரில் முஸ்லிம்களின் வழிபாட்டு தளங்களை குறி வைப்பதை காவல்துறை நிறுத்த என வேண்டும் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுகொள்கின்றது.

இப்படிக்கு

M.முஹம்மது சேக் அன்சாரி,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.