ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தினர் (SLTJ) ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவர்களை விரட்டியடிப்போம் - பொதுபலசேனா பௌத்த தீவிரவாதிகள்தௌஹீத் ஜமாஅத் அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள முஸ் லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தத்­துக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டத்தை நிறுத்திக் கொள்­ள­ வேண்டும்.

இந்த ஆர்ப்­பாட்­டத்தை அர­சாங்கம் தடை­செய்ய வேண்டும். தடை­செய்­யப்­ப­டா­விட்டால் நாம் அவர்­களை விரட்டி­ய­ டிப்போம் என பொது­ப­ல­சேனா அமைப்பு சவால் விட்­டுள்­ளது.

நேற்று கிரு­லப்­பனை பௌத்த மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற பொது­ப­ல­சே­னாவின் ஊடக மாநாட்டில் அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர் இவ்­வாறு சவால் விட்­டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், தௌஹீத் அமைப்பு எமது பௌத்த நாட்டில் ஷரீஆ தொடர்­பான ஆர்ப்­பாட்­டங்­களைச் செய்ய முடி­யாது.

அவ்­வாறு ஆர்ப்­பாட்­டங்கள் செய்ய வேண்­டு­மென்றால் அவர்கள் சவூதி அரே­பி­யா­வுக்குச் செல்­ல­வேண்டும்.

தௌஹீத் ஜமாஅத் நாட்டில் இன­மு­ரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­க­ளையே முன்­னெ­டுக்­கின்­றன.

இவற்­றுக்கு எதி­ராக எந்­தவோர் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் குரல் கொடுப்­ப­தில்லை.

நாட்டில் 64 காதி நீதி­மன்­றங்கள் முஸ்­லிம்­க­ளுக்­கென்று இயங்கி வரு­கின்­றன. இவற்­றுக்கு எங்­களின் பணமே செலவு செய்­யப்­ப­டு­கி­றது.

இலங்­கையில் ஷரீஆ சட்­டத்தை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. இன்று வங்­கி­களில் ஷரீஆ பிரி­வுகள் ஆரம்­பிக்­கப்­ப­டு­கின்­றன.

வங்­கி­களை ஷரீஆ வங்­கி­க­ளாக்கி முஸ்லிம் பெண்­க­ளுக்­கென்று தனி­யான கவுண்­டர்­களை அமைக்­கு­மாறு கேட்­கி­றார்கள். இது என்ன நியாயம்?
3000க்கும் மேற்­பட்ட அரபு மத்­ர­னாக்கள் இயங்கி வரு­கின்­றன. மாண­வர்­க­ளுக்கு அரபு மாத்­தி­ரமே போதிக்­கப்­ப­டு­கி­றது.

முஸ்லிம் மாண­வர்கள் சிங்­கள மொழி படிப்­பது கட்­டா­ய­மாக்­கப்­ப­ட­வேண்டும். நாட்டின் சட்­டங்­களும் படிப்­பிக்­கப்­பட வேண்டும். ஏன் முஸ்­லிம்­களால் சிங்­களம் படிக்க முடி­யாது.

அரபு மொழி மாத்­திரம் படிப்­பது இலங்கை ஒரு அரபு நாடல்லவே. எமது நாட்டின் சட்டங்களையும்  எமது கலாசாரங்களையும் மதித்து இங்கு வாழ முடியுமென்றால் இருங்கள். இல்லையேல் நாட்டை விட்டும் வெளியேற தயாராக இருங்கள்.

Share on Google Plus

1 comments:

  1. பைத்தியத்தில் உளறுவதையெல்லாம் அறிவோடு சிந்திக்கும் நாம் அலட்டிக்கொள்ளவேண்டியதில்லை...

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.