பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளை அகற்றவேண்டிய அவசியமில்லை.! - TNTJ' சுற்றறிக்கை..!கோவில்,மசூதி,சர்ச்களில் பயன்படுத்தும் ஒலிபெருக்கிகளுக்கு உச்சநீதிமன்றம் சில வழிமுறைகளை பேண உத்தரவிட்டுள்ளது.அந்த உத்தரவுகளை தமிழக அரசு அரசாணையாக எதிர்வரும் ஜனவரி 14 க்குள் வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

தமிழகத்தில் அங்காங்கே மசூதிகளில் பயன்படுத்திவரும் ஒலிபெருக்கிகளை காவல்துறை அகற்ற சொல்லி வருவதாக தகவல்கள் வருகிறது.உயர் அதிகாரிகளிடம் இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகள் விபரம் அறியாமல் மசூதிகளில் பயன்படுத்தும் ஒலிபெருக்கிகளை அகற்ற வலியுறுத்தினாலோ அல்லது அகற்ற முயற்சித்தாலோ மசூதி நிர்வாகத்தினர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தை தொடர்புக்கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

நீதிமன்ற உத்தரவில் ஒலி பெருக்கிகளின் ஒலி அளவில் 70  'டெசிபில்' அளவிற்க்குள் முறைப்படுத்தி பயன்படுத்துமாறுதான் கூறப்பட்டுள்ளது.

ஒலிபெருக்கிகளை முழுமையாக அகற்றுமாறு கூறப்படவில்லை.

ஆகையால் உங்கள் பகுதி பள்ளிவாசல் குழாய்களை காவல்துறையினர் அகற்ற சொன்னால், அவர்களிடம் இந்த விஷயத்தை எடுத்து சொல்லி, ஒலி அளவை குறைக்கிறோம் என்று கூறுங்கள்.

மேலும் உங்களை கட்டாயப்படுத்தினால், நீதிமன்ற உத்தரவை தருமாறு கேளுங்கள்.

அதற்கு மேலும் கட்டாயப்படுத்தினால், TNTJ தலைமையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

இப்படிக்கு,
மாநிலப் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்..

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.