பல்லாயிரம் உயிரை பழிவாங்கிய போபால் விஷ வாயு கசிவு கோரா சம்பவம் நிகழ்ந்த நாள் இன்று! 03.12.1984:சரியாக 32 வருடங்களுக்கு முன்பு,இதே நாளில் மத்திய  பிரதேச மாநிலம் போபாலில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவினால் பல்லாயிரக்கணக்கான பேர் உயிரிழந்த தினம் இன்று.

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் ஆண்டர்சன் என்பவருக்கு சொந்தமான யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது.     இந்த தொழிற்சாலையில் 03.12.1984 அன்று அதிகாலையில் 'மீத்தைல் ஐசோ சயனேட்' எனும் நச்சு வாயு  கசிந்தது.

இந்த விபரீத விபத்தினால் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். உடனடி உயிரிழப்பாக ஏறத்தாழ 2,259 பேர் அந்த வாயுவின் பாதிப்பால் இறந்தனர்.   அதற்கடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 8,000 பேர் இறந்தனர். மேலும் 8,000 பேர் இந்த வாயு பாதிப்பின் பின் விளைவுகளால் உண்டான நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்தனர். இந்த கோரா விபத்தால் இறந்தவர்களிலும் பதிப்படைந்தவர்களிலும் கணிசமானோர் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிட்ட தக்கது

'போபால் பேரழிவு' என்று அழைக்கப்படும் இந்த பேரழிவானது உலகில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்பட்ட பேரழிவுகளில் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்திய பேரழிவாகக் கருதப்படுகிறது.

இந்த விபத்தினால் அங்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய 1993 ஆம் ஆண்டு அனைத்து நாடுகளை சேர்ந்த மருத்துவக்குழு ஆணையம் ஒன்று இங்கே ஏற்படுத்தப்பட்டது

பல்லாயிர கணக்கான மக்களை கொலை செய்த   யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு ஆதரவாக இன்றைய மத்திய நிதி அமைச்சர்  அருண் ஜெட்லீ  தனது வாத திறமையால் இந்திய நாட்டை விட்டு  தப்பிக்க  வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.