10 வருடங்களாக இயங்கி வந்த போலி அமெரிக்க தூதரகம்கானாவின் தலைநகரான அக்ராவில் கடந்த பத்து வருடங்களாக இயங்கி வந்த போலி அமெரிக்கக் தூதரகத்தை அதிகாரிகள் மூடியுள்ளனர். இந்த போலி அமெரிக்க தூதரகத்தில் சட்டவிரோதமாக பெறப்பட்ட அமெரிக்க விசாக்களை ஒரு கிரிமினல் கும்பல் வழங்கி வந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கையில், இந்த தூதரகத்தின் வெளியே அமெரிக்க கொடி பறக்க விடப்பட்டுள்ளது என்றும் உள்ளே அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மிகப்பெரிய புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் இது அமெரிக்க அரசால் நடத்தப்படவில்லை என்றும் கானா வை மையமாகக்கொண்ட வழக்கறிஞர் ஒருவராலும், கானா மற்றும் துருக்கியை மையமாகக் கொண்ட கிரிமினல் கும்பலாலும் இயக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த தூதரகங்கள் போலியான ஆவணங்களை வைத்து சட்டவிரோதமாக பெறப்பட்ட உண்மையான அமெரிக்க விசாவை தலைக்கு 6000 அமெரிக்க டாலர் விலைக்கு விற்றுள்ளது. இந்த தூரகங்கள் மீது நடத்தப்பட்ட சோதனையில் பல நிஜ மற்றும் போலியான இந்திய, தென்னாபிரிக்க விசாக்களும், இன்னும் பத்து நாடுகளை சேர்ந்த 150 க்கும் மேற்ப்பட்ட பாஸ்போர்ட்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கு எப்படி உண்மையான விசாக்கள் கிடைத்தது என்றோ அல்லது இதுவரை எத்தனை பேர் இது போன்ற விசாக்களை பயன்படுத்தி பல நாடுகளுக்கு சென்றுள்ளார்கள் என்றோ எந்த ஒரு தகவலும் இல்லை.

ஆங்கிலம் மற்றும் துருக்கிய மொழி பேசும் நபர்கள் தூரக அதிகாரிகள் போல் நடித்து இந்த இந்த போலி தூதரகத்தை நடத்தியுள்ளனர். இதே போன்று போலி நெதர்லாந்து தூதரகமும் நடத்தி வரப்பட்டது கண்டரியப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.