தமிழ் நாட்டில் சிக்கிய 100 கோடிகள், 100 கிலோ தங்கம்மணல் அள்ளும் ஒப்பந்ததாரர்களான ஸ்ரீனிவாச ரெட்டி, சேகர் ரெட்டி மற்றும் அவர்களது முகவர் பிரேம் ஆகியோர் இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் 90 கோடி ரூபாய் ரொக்கமும் 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சேகர் ரெட்டிக்கு பல பெரிய இடங்களின் தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இதில் பறிமுதல் செய்யப்பட்ட 90 கோடி ரூபாயில் 70 கோடி ரூபாய் புதிய 2000 ரூபாய் தாள்களில் இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய 2000 ரூபாய்களுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் 70 கோடி ரூபாய் புதிய 2000 தாள்களில் இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மீதம் உள்ள 20 கோடி ரூபாய், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களில் இருந்துள்ளது.

இந்த பண பறிமுதல் தொடர்பாக சேகர் ரெட்டியிடம் புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. இவரது இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் பெரும்பகுதி திநகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த சேகர் ரெட்டி தான் தற்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பதி பாலாஜி கோவிலில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து கொடுத்தவர் என்று கூறப்படுகிறது.

மற்றொரு சோதனையில் வருமான வரித்துறை 100 கிலோ தங்கமும் 73 கோடி ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இதில் 8 கோடி ரூபாய் புதிய 2000  ரூபாய் தாள்களில் இருந்துள்ளது. மீதமுள்ள 65 கோடி ரூபாய் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களில் இருந்துள்ளது. இதை தவிர மேலும் ஒரு 10 கோடி ரூபாய் அன்று மாலை அவர்களிடத்தில் சிக்கியுள்ளது. இதன் தேடுதல் வேட்டை இன்னும் நடக்க இருப்பதாகவும், 500 மற்றும் 1000 செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவே மிகப்பெரியது என்று வருமான வரித்துறையினர் கூறியுள்ளனர்.

இவை அல்லாமல் நாட்டில் பல பகுதிகளில் வங்கிக் கணக்கின் உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே அவர்களது கணக்குகளில் பல கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் ஒரு கிராமத்தில் ஒரு பெண்ணின் கணக்கில் நவம்பர் மாதம் 8 ஆம் தேதிக்கு பின்னர் 3.29 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெற்றோர்கள் உட்பட இவர்களின் பெயர்களில் இது போன்று இன்னும் ஆறு வங்கிக் கணக்குகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதே போன்று தமிழக கிராமங்களில் கூலித் தொழிலாளிகளின் வங்கிக் கணக்குகளில் தலா 2.5 லட்ச ரூபாய் வரவு வைக்கப்பட்ட செய்தி சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.