ஒரே ஆண்டில் 1000 ரன், 30 விக்கெட்: இங்கிலாந்து வீரர் மொய்ன் அலி சாதனைஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மொய்ன்அலி இந்த ஆண்டு டெஸ்ட்டில் 17 போட்டியில் 1078 ரன் எடுத்துள்ளார். 30 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மொய்ன் அலி.

இந்த ஆண்டு டெஸ்ட்டில் மொய்ன்அலி 17 போட்டியில் 1078 ரன் எடுத்துள்ளார். 30 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

இதில் மொய்ன்அலி சாதனை படைத்து உள்ளார். ஒரே ஆண்டில் 1000 ரன், 30 விக்கெட் எடுத்த 3-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் போத்தம் 13 டெஸ்ட்டில் விளையாடி 1095 ரன்னும், 47 விக்கெட்டும் எடுத்தார்.

2-வதாக தென்ஆப்பிரிக்க அணி வீரர் காலிஸ் 2001-ம் ஆண்டு 14 டெஸ்ட்டில் 1120 ரன், 35 விக்கெட் எடுத்தார்.

தற்போது 3-வது வீர ராக மொய்ன்அலி இந்த மைல்கல்லை எட்டி உள்ளார்.

மேலும் இந்த ஆண்டில் 1000 ரன்னை கடந்த 5-வது வீரர் மொய்ன்அலி ஆவார்.

இங்கிலாந்தின் ஜோரூட் (1477 ரன்), ஜானி பேர்ஸ் டோவ் (1470), அலக்ஸ்டர் குக் (1270), இந்திய கேப்டன் வீராட்கோலி (1215) ஆகியோர் ஆயிரம் ரன்னை கடந்துள்ளனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.