சவுதியில் தாக்குதலுக்கு திட்டமிட்ட பிலிப்பைன் பெண்ணுக்கு 10 வருட சிறைஈராக் மற்றும் சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பிலிப்பீனைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதித்து சவுதி அரேபிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறைத் தண்டனை முடிந்த பின்னர் அப்பெண்னை பிலிப்பைனுக்கு நாடு கடத்தும் படியும் சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுதியில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளை திட்டமிட்டமை, லிபிய ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணைந்து செயற்பட்டமை, பயங்கரவாத தாக்குதல் நடாத்த திட்டமிட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.

1984 ஆம் ஆண்டு பிறந்த இப்பெண் பணிப்பெண்ணாக சவுதிக்கு வருகை தந்துள்ளார். பாதுகாப்புப் பிரிவினரினால் இவரது இலத்திரனியல் உரையாடல்கள் ஒத்துப் பார்க்கப்பட்டதன் பின்னர் இவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்பிருப்பது ஊர்ஜீதப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் இவர் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் போது, இவர் எந்த நேரத்திலும் ஐ.எஸ். இயக்கத்துக்காக தாக்குதல் நடாத்த தயாராகவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது எனவும் சவுதி செய்திகள் தெரிவித்துள்ளன.  (மு)
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.