துபாயில் கடந்த 11 மாதங்களில் 80,000 போக்குவரத்து குற்றங்கள் பதிவு !துபையில் 2016 ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை கடந்த 11 மாதங்களில் சுமார் 80,710 போக்குவரத்து விதிமீறல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 28,180 குற்றங்கள் கண்காணிப்பு ரேடார் கேமராக்கள் மூலமும் எஞ்சியவை போலீஸ் மற்றும் பொதுமக்களின் புகாரின் அடிப்படையிலும் பதிவு செய்யப்பட்டவை.

அதிகபட்சமாக, கடந்த மே மாதம் 9,510 குற்றங்களும் குறைந்தபட்சமாக ஜனவரி மாதத்தில் 5,520 குற்றங்களும் பதிவாகியுள்ளன. முன்னாள் ராணுவத்தினர் பதியும் போக்குவரத்து புகார்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும், பொதுமக்கள் 910 என்ற கட்டணமில்லா தொலைபேசி வழியாக தெரிவிக்கும் புகார்கள் போலீஸாரின் விசாரணைக்குப் பின் பதியப்படுவதாகவும் துபை போக்குவரத்துத் துறையின் மேலாண் இயக்குனர் பிரிகேடியர் சைஃப் அல் மஜ்ரோஹி அவர்கள் தெரிவித்தார்கள்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.