கம்யூனிஸ்டு நிர்வாகி கொலை: 11 ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனைதிருவனந்தபுரத்தில் கம்யூனிஸ்டு நிர்வாகி கொலை வழக்கில் 11 ஆர்.எஸ்.எஸ்.  பயங்கரவாதிகளுக்கு  இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பளித்தது.

திருவனந்தபுரம் வஞ்சியூர் கைதமுக்கு பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்டு தொண்டர் விஷ்ணு. இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி ஒரு கும்பலால் இரும்பு கம்பியால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த 16 பேர் மீது புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு திருவனந்தபுரம் கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கான தண்டனை விவரம் பிறகு அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்து இருந்தார். அதன்படி இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு கூறப்பட்டது.

இந்த வழக்கில் 11 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய ஒருவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார். ஒருவர் வழக்கில் இருந்து விடுக்கப்பட்டார். ஒருவர் மட்டும் இன்னும் தலைமறைவாக உள்ளார்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.