தஞ்சையில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் புதிய 'சூப்பர் ஸ்பெசாலிட்டி' மருத்துவமனைதஞ்சாவூர் மாவட்டத்தில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுகின்ற வகையில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ( Super Specialty Hospital ) கட்டப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உத்தரவிற்கிணங்க தமிழகத்தில் முதற்கட்டமாக சேலத்திலும், இரண்டாவது கட்டமாக மதுரை மற்றும் சென்னை ஓமந்துரர் வளாகத்திலும், மூன்றாவது கட்டமாக திருநெல்வேலி மற்றும் டெல்டா மாவட்டங்களாகிய திருச்சி, திருவாரூர், நாகப்பட்டிணம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் பயன் பெறுகின்ற வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ( Super Specialty ) அமைக்க உத்தரவிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

பிரதான கட்டிடம் 19,396 சதுரடியிலும், இதர கட்டிடங்கள் 800 சதுரடியிலும், ஆக மொத்தம் 20,196 சதுரடியில் கட்டப்பட்டு வருகின்றது. ரூ.150 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மருத்துவமனையில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் கட்டுமானம் மற்றும் மின் பகிர்மானத்திற்காகவும், உயரிய மருத்துவ உபகரணங்களுக்காக ரூ.55 கோடியும், தீயணைப்பு பாதுகாப்பு சாதனங்களுக்கு ரூ.80 இலட்சமும், சி.சி.டிவி கண்காணிப்பு கேமிராவிற்கு ரூ.30 இலட்சமும், சோலார் மின் வசதிக்காக ரூ.50 இலட்சமும், இன்டர்காம் வசதிக்காக ரூ.30 இலட்சமும், ரூ.13.1 கோடி இதர செலவினங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

இருதய மருத்துவ சிகிச்சை பிரிவு, இருதய அறுவை சிகிச்சை பிரிவு, நரம்பியல் மருத்துவ சிகிச்சை பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு, சிறுநீரக மருத்துவ சிகிச்சை பிரிவு, சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவு, உடல் இரைப்பை மருத்துவ சிகிச்சை பிரிவு, உடல் இரைப்பை அறுவை சிகிச்சை பிரிவு, வாஸ்குலர் அறுவை சிகிச்சை பிரிவு, கதிரியக்க அறுவை சிகிச்சை பிரிவு, மயக்கவியல் சிகிச்சை பிரிவு, மருத்துவ ஆய்வகம், ரத்த வங்கி, ஆகியவைகளுக்காக ரூ.55 கோடி மதிப்பீட்டில் உயரிய மருத்துவ உபகரணங்கள் வாங்கப்படவுள்ளது.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகளுடன்  பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைவதன் மூலம் இதய மருத்துவ சிகிச்சை  பிரிவிற்கு கூடுதலாக 20 படுக்கை வசதிகளும், இதய அறுவை சிகிச்சை பிரிவிற்கு கூடுதலாக 20 படுக்கை வசதிகளும், நரம்பியல் மருத்துவ சிகிச்சை பிரிவிற்கு கூடுதலாக 20 படுக்கை வசதிகளும், நரம்பியல் அறுவை சிசிக்சை பிரிவிற்கு கூடுதலாக 20 படுக்கை வசதிகளும், சிறுநீரக மருத்துவ சிகிச்சை பிரிவிற்கு கூடுதலாக 20 படுக்கை வசதிகளும், சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவிற்கு கூடுதலாக 20 படுக்கை வசதிகளும், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவிற்கு கூடுதலாக 20 படுக்கை வசதிகளும், குடல் இரைப்பை மருத்துவ சிகிச்சை பிரிவிற்கு கூடுதலாக 20 படுக்கை வசதிகளும், குடல்  இரைப்பை அறுவை சிகிச்சை பிரிவிற்கு கூடுதலாக 20 படுக்கை வசதிகளும், இரத்த நள அறுவை சிகிச்சை பிரிவிற்கு கூடுதலாக 20 படுக்கை வசதிகளும் என 10 சிகிச்சை பிரிவுகளுக்கு 200 படுக்கை வசதிகளும், தீவிர சிகிச்சை பிரிவு 90 படுக்கை வசதிகளும் என மொத்தம் 290 படுக்கை வசதிகள் உள்ளடக்கியது. மேலும், உயரிய வசதியுடன் 5 அறுவை சிகிச்சை மையங்களும் அமைக்கப்படவுள்ளது.

இப்பணியானது 15.06.2015 அன்று தொடங்கப்பட்டு கட்டிட பணிகள் மற்றும் அனைத்து பணிகளும் 16.12.2017க்குள் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.