1994-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையை தாக்கும் வர்தா புயல் : பிற்பகல் 2 மணியில் இருந்து 5 மணிக்குள் கடக்கும்சென்னைக்கு கிழக்கே 50 கி.மீ. தொலைவில் வர்தா புயல் மையம் கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது 67 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. பிற்பகல் 2 மணியில் இருந்து 5 மணிக்குள் பழவேற்காடு - கும்மிடிபூண்டி அருகே வர்தா புயல் கரையை கடக்கும் என அவர் தெரிவித்துள்ளார். புயல் கரையை கடந்த பிறகு மணிக்கு 100 முதல் 110 கி.மீ வரை காற்று வீசுக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

வர்தா புயல் 13 கி.மீ. வேகத்தில் கரையை கடந்து வருகிறது. இதேபோல் புயல் கரையை கடந்த பின்னர் தெற்கு திசையில் இருந்து பலத்த காற்றும், கன மழையும் தொடரும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார். புயல் கரையை கடந்த பிறகு அடுத்த 12 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து

புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை புறநகர் ரயில்கள் இயக்கப்பட மாட்டாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.