ரயில் மீது நின்று செல்பி எடுத்த பிளஸ் 2 மாணவன் மின்கம்பியில் கை உரசியது உடல் கருகியது நெல்லையில் பரிதாபம்நெல்லையில் ரயில் மீது நின்று செல்பி எடுத்த பிளஸ் 2 மாணவர் மின்சாரம் தாக்கி  உடல் கருகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி லட்சுமி நகரைச்சேர்ந்தவர் காசிராஜன்(48). இவர் அபுதாபியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். உறவினர் இல்ல திருமணத்திற்காக இரண்டு மாத விடுமுறையில் தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவரது மகன் யுவராஜ்(17), பிளஸ் 2 படிக்கிறார். உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக  காசிராஜன் தனது மகன் மற்றும் குடும்பத்தினருடன் நேற்று அதிகாலை நெல்லை வந்தார். காலை 7 மணிக்கு யுவராஜ் மற்றும்  உறவினர் சுரேஷ்(19) இருவரும் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தனர்.

அப்போது ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் பெட்டி மீது ஏறிய யுவராஜ் உயரத்தில் நின்றவாறு செல்பி எடுத்தார்.  அப்போது எதிர்பாராதவிதமாக  மேலே சென்ற அதி உயர் அழுத்த மின் கம்பி மீது அவரது கைபட்டது. இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயமடைந்தார். இதில் அவரது உடல் முழுவதும் கருகியது. கீழே நின்ற சுரேஷ் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து தனது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். உடனே அங்கு வந்த உறவினர்கள் மற்றும் ரயில் நிலைய ஊழியர்கள் யுவராஜை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள யுவராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இகுறித்து நெல்லை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.