திருச்சி வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து - பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வுதிருச்சி மாவட்டத்தில் உள்ள முருகப்பட்டியில் உள்ள தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முருகப்பட்டியில் தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையின் ஒரு அலகில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இங்கு வெடி பொருட்கள், தோட்டா தயாரிக்கும் 7 தொழிற்சாலைகள் உள்ளன. இதில் ஒரு அலகில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. தொழிற்சாலையில் மேலும் சிலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது.

தோட்டா தொழிற்சாலையில் 50க்கும் மேற்பட்டோர் பணியில் இந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 6 தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. தீ விபத்து நடந்த தொழிற்சாலையின் அருகே பொதுமக்கள் யாரையும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. உயிரிழந்தவர்களின் உடல்பாகங்கள் துண்டு துண்டாக சிதறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 7 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், தொழிற்சாலை வெடித்ததில் கற்கள் வெடித்து சிதறி 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் சம்பவ இடத்தில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு இதுவரை எந்த ஒரு அதிகாரியும் வந்து பார்வையிடவில்லை என்று உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர். வெடி விபத்து ஏற்பட்ட பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் மீட்புப்பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.