தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காததால் 23 பேர் கைது ! – வீடியோதேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காததால் 23 பேர் கைது ! கேடுகெட்டவர்கள் ஆட்சி செய்தால் இப்படித்தான்


 21வது சர்வதேச திரைப்பட திருவிழா கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. திரைப்பட விழாவில் பங்கேற்று திரைப்படங்களை கண்டு ரசிக்க பல நகரங்களில் இருந்தும் ரசிகர்கள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில், திரைப்பட விழாவில் திரைப்படம் ஒன்று திரையிடப்படும்போது, ஒலிபரப்பப்பட்ட தேசிய கீதத்தின்போது, சிலர் எழுந்து நிற்கவில்லையாம். போலீசாரின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் அவர்கள் அமர்ந்தே இருந்துள்ளனர். இதையடுத்து, தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்கவில்லை என கூறி 23 பேரை போலீசார் கைது செய்தனர்,

அதில் இருவர் பெண்கள். அவர்கள் இன்று ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளனர். அவர்கள் மீது, ஐ.பி.சி. பிரிவு 188ன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும், அப்போது மாற்றுத்திறனாளிகளை தவிர்த்து பிறர் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது கட்டாயம் என்றும், கடந்த மாதம் 30ம் தேதி சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 தேசத்தின் மீதான மரியாதையை எழுந்து நின்றுதான் காட்ட வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இல்லை என கைது செய்யப்பட்டவர்கள் கோஷமிட்டது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.