நாய்களின் காவலில் பதுக்கப்பட்டிருந்த ரூ.2.89 கோடி பறிமுதல்கர்நாடக மாநிலம், பெங்களூரில் வேட்டை நாய்களின் காவலில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.89 கோடி ரொக்கத்தை வருமான வரித் துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
பெங்களூரின் யஷ்வந்த்பூர் பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் கோடிக்கணக்கிலான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில், அந்த வீட்டுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சென்றனர். ஆனால், அந்த வீட்டில் இருந்த மூதாட்டி அந்த அதிகாரிகளை சோதனையிட அனுமதிக்கவில்லை.
அதிகாரிகள் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைய முயன்றபோது, அந்த மூதாட்டி வீட்டிலிருந்த 2 பெரிய வேட்டை நாய்களை காண்பித்து அதிகாரிகளை மிரட்டியுள்ளார். இதனால் அதிகாரிகள் அந்த வீட்டில் சோதனையிடாமல் திரும்பினர்.

இந்நிலையில், போலீஸாரின் உதவியுடன் அந்த வீட்டுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை காலையில் மீண்டும் சென்றனர். அப்போது, அங்கிருந்த இரண்டு நாய்களையும் போலீஸார் அப்புறப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அங்கு கணக்கில் காட்டப்படாத ரூ.2.89 கோடி ரொக்கம் பதுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டடது. அவற்றில் ரூ.2.25 கோடி, ரூ.2000 புதிய ரூபாய் நோட்டுகள் ஆகும். இதையடுத்து, அந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
கோவாவில்...: இதேபோல், கோவா மாநிலம் பனாஜியில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கு புதிய ரூபாய் நோட்டுகளாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.67.98 லட்சத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.