ரூபாய் நோட்டின் மீதான தடை 3 -5 லட்ச கோடி ஊழல் - மோடிக்கு எதிராக மாறிய ராம்தேவ்பல தருணங்களில் நரேந்திர மோடிக்கு தன்னை நெருக்கமானவராக காட்டிக்கொண்ட பாபா ராம்தேவ் 500 மற்றும் 1000 ரூபாய் தடை செய்யப்பட்டது 5 லட்ச கோடி ஊழல் என்று தற்போது தெரிவித்துள்ளார். இது குறித்து பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் மோடி கறைபடிந்த ஊழல் வங்கி அதிகாரிகளால் வழி கெடுக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

இந்த திட்டத்தை நடைமுறை படுத்திய முறையே பெரும் தவறு என்று அவர் கூறியுள்ளார். அரசின் இந்த நடவடிக்கையால் வங்கி அதிகாரிகள் பல கோடிகளை சம்பாதித்து விட்டனர் என்றும் மோடியால் கூட அவர்கள் செய்த ஊழலின் அளவை கணக்கிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் “நாட்டில் பணத்திற்கு தட்டுப்பாடு இல்லை, ஆனால் அனைத்து பணங்களும் ஊழல்வாதிகளிடம் செல்கின்றன. இந்த திட்டத்தை அரசு இன்னும் முறையாக அமல் படுத்தியிருக்கலாம்” என்று அவர் கூறியுள்ளார். “இந்த ஊழலில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளது தான் துரதிர்ஷ்டவசமானது. இது இந்த அமைப்பின் மீதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.