இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் 43,000 பேர் வீடிழந்த பரிதாபம்!இந்தோனேசியா நாட்டில் உள்ள அசெக் மாகாணத்தில் 3 நாட்கள் முன்பாக, நிகழ்ந்த பலத்த நிலநடுக்கம் காரணமாக, 43,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பதாக, தெரியவந்துள்ளது.

அசெக் மாகாணத்தில், நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவானது. இதில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி உயிரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும், 500க்கும் அதிகமானோர் காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


அதேசமயம், 10 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்பு மற்றும் வணிக வளாகக் கட்டிடங்கள் இடிந்து விழுந்துவிட்டதால், மக்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். 43,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பதால், அவர்களுக்குத் தேவையான முதல்கட்ட உதவிகளை வழங்கிவருவதாக, அசெக் மாகாண அரசு கூறியுள்ளது.

வீடுகளை இழந்த மக்கள், தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக, மாற்று இடங்கள் அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அசெக் மாகாண அரசு உறுதி அளித்துள்ளது. அதிக உயிரிழப்புகள் ஏற்படாதபோதிலும், பலத்த உள்கட்டமைப்பு சேதத்தை, சமீபத்திய நிலநடுக்கம் ஏற்படுத்திவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே அசெக் மாகாணத்தை ஒட்டி, கடந்த 2004ம் ஆண்டு டிசம்பரில் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக, இந்திய பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டு, லட்சக்கணக்கானோர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.