44 சதவிதம் வரை விலை குறையும் 50 முக்கிய மருந்துகள்..!நீரிழிவு, HIV போன்ற நோய்களுக்கான 50 முக்கிய மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதனால், இவற்றின் விலை 44 சதவீதம் வரை குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு, மனஅழுத்தம், HIV தொற்று, பாக்டீரியா தொற்று போன்ற நோய்களுக்கு அளிக்கப்படும் இத்தகைய மருந்துகளின் விலையை தேசிய மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் நிர்ணயித்துள்ளது. 55 மூலக்கூறு மருந்துக் கலவைகளான இவை பிரிவு 1 மருந்துப் பட்டியலில் வருகின்றன. இவற்றின் அதிகபட்ச விலையை மருந்துக் கட்டுப்பாட்டு சட்டம் 2016-ன் படி நிர்ணயித்துள்ளது. இதனால், 50 மருந்துகளின் விலை 5 முதல் 44 சதவீதம் வரை குறையும் என்று தேசிய மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. சராசரியாக 25 சதவீதம் வரை விலை குறையும் என்றும் அறிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.