ரூ 47 லட்சம் கள்ளநோட்டுடன் விஷாகா வர்மா மற்றும் மூன்று பேர் கைதுமொகாலியில் ரூ. 47 லட்சம் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் மூவர் கைது செய்யப்பட்டனர் என்று போலீஸ் தெரிவித்து உள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. புதிய 2000 ரூபாய் நோட்டுகளை விரோதிகள் ஜெராக்ஸ் எடுத்து ஏமாற்றிவரும் நிலையானது தொடர்ந்து நீடிக்கிறது. போலி ரூபாய் நோட்டு தொடர்பாக நாடு முழுவதும் கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

இப்போது பஞ்சாப் மாநிலம் மொகாலியில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்த மூன்று பேர் சிக்கிஉள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ. 47 லட்சம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து இவர்கள் திட்டமிட்டு புதிய 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்து உள்ளனர். ரூபாய் நோட்டுகளை பார்க்கையில் அப்படியே அரசு வெளியிட்ட புதிய 2000 ரூபாய் நோட்டுகளை போன்றே உள்ளது, இவர்கள் சரியாக திட்டமிட்டு கள்ள நோட்டுகளை அடித்து உள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மூவரும் ஆடிகாரில் சென்று பயணாளர்களிடம் பணத்தை கொண்டு சென்றபோது பாகார்பூர் கிராமத்தில் போலீசார் நடத்திய சோதனையில் சிக்கிக்கொண்டனர். கைது செய்யப்பட்டவர்கள் காபூர்தலாவை சேர்ந்த எம்.பி.ஏ. மாணவர் விஷாகா வர்மா, அவருடைய உறவுக்கார வாலிபர் அபிநவ் வர்மா (ஜிராக்பூரின் தாகோலியை சேர்ந்தவர்) மற்றும் அவர்களுடைய நண்பரும், தரகருமான சுமான் நாக்பால் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுமான் நாக்பால் லூதியானாவை சேர்ந்தவர். இவ்விவகாரத்தில் இவர்களுடன் தொடர்புடைய மேலும் இருவரை தேடிவருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கள்ள நோட்டுகளை இவர்கள் மாற்றி வந்து உள்ளனர் என்றும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

போலீசார் மூவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து உள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.