50 ஆயிரம் ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகள் உயிரிழப்பு.கடந்த இரண்டு ஆண்டுகளாக இராக் மற்றும் சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையில் இதுவரையில் 50,000  (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் பலியாகி உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவத்தின் உயரதிகாரி கூறியதாவது:

இராக் மற்றும் சிரியாவில் சண்டையிட்டு வரும் ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. இந்த தாக்குதல் கடந்த 2014-ஆம் ஆண்டு இறுதியிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கா நிகழ்த்தி வரும் இந்த அதிரடித் தாக்குதலுக்கு இதுவரையில் இராக் மற்றும் சிரியா நாடுகளில் 50,000 ஐ.எஸ். பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என்றார் அவர்.

அதேவேளை ஒரு உறுப்பினர் உயிரிழந்தால் தாம் அதே நேரத்தில் இன்னொரு உறுப்பினரை இணைத்துக்கொண்டு போராட்டத்தை தொடர்கிறோம் என ஐ.எஸ். அமைப்பினர் தமது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.