சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் 58 பயனாளிகளுக்கு ரூ.3.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் !தஞ்சாவூரில் தீர்க்க சுமங்கலி மஹாலில் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் இன்று (18.12.2016) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் சிறுபான்மையின மாணவ மாணவியர்கள் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் மற்றும் பரிசுத் தொகையாக 13 மாணவ மாணவியர்களுக்கு ரூ.37000மும்,  உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல உதவியாக 3 பயனாளிகளுக்கு ரூ.4000மும், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 16 பயனாளிகளுக்கு ரூ.75,270 மதிப்பிலான தையல் இயந்திரம், கிரைண்டர், சிறு வணிக உதவி தொகைகளும், நரிக்குறவர் நல வாரியம் மூலம் 26 பயனாளிகளுக்கு ரூ.1,95,000 மதிப்பிலான உதவி தொகைகளும், சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்களும் வழங்கி என ஆக மொத்தம் 58 பயனாளிகளுக்கு ரூ.3,11,270 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:

சிறுபான்மையினர் நலனுக்காக ஐக்கிய நாடு சபையில் 1992 டிசம்பர் 18ம் தேதி, சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா அறிவிக்கப்பட்டு நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.  இங்கு பெரும்பான்மையான உள்ள நாம் வேறு இடங்களுக்கு வேலை நிமித்தமாக செல்லும் பொழுது அங்கு நாம் சிறுபான்மையினராக மாறி விடுகின்றோம்.  குறிப்பாக வெளிநாடுகளில் வேலை செல்லும் பொழுது அங்கே சிறுபான்மையினராக மாறி விடுகின்றோம். இந்திய நாட்டில் பொருளாதாரம் வீருநடை போடுவதற்கு அனைத்து சமுதாய மக்களும் ஒருங்கிணைந்து செயல்படுதவன் மூலமாக இது சாத்தியமடைக்கின்றது.  அதே போல், தமிழ் சமுதாயத்திற்கு சமணர்களும், பௌத்தர்களும் சங்க காலங்களிலும் மொழியின் நலனுக்காக கிறிஸ்தவர்களும், முஸ்லீம் சமுதாயத்தினரும், ஜி.யூ.போப், காயிதே மில்லத் போன்றவர்கள்  தமிழ் இலக்கியங்களில் பல படைப்புகளை செய்து உள்ளனர். சிறுபான்மையினர் அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு அத்திட்டங்களை பெற்று சமூகத்தில் மேன்மையடைய கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் பேசினார்கள்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.சுரேஷ் (தஞ்சாவூர்), கோவிந்தராசு (பட்டுக்கோட்டை), மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ்.மோகன், நிலவள வங்கித்தலைவர் துரை. வீரணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெய்னூலப்தீன், சமூக பாதுகாப்புத்திட்ட துணை ஆட்சியர் உதயகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சரவணன், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர்கள் திரு.செல்வம், முத்துக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.