தமிழகம் முழுவதும் ஜெயலலிதா மரண செய்தியை கேட்ட அதிர்ச்சியில் 66 பேர் மரணம்!தமிழகம் முழுவதும் ஜெயலலிதா மரண செய்தியை கேட்ட அதிர்ச்சியில் 66 பேர் இறந்தனர். புதுவையில் ஒருவர் இறந்தார்.

காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம், கடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 60). தீவிர அ.தி.மு.க. தொண்டரான இவர் நேற்றுமுன்தினம் இரவு முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்தார் என்ற செய்தியை டெலிவிஷனில் பார்த்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

வாலாஜாபாத் ஒன்றியம் தென்னேரி கிராமத்தை சேர்ந்தவர் சையத் ரசூல் (70). அ.தி.மு.க. தொண்டரான இவர் வீட்டில் டி.வி.யில் ஜெயலலிதா மரணம் குறித்த செய்தியை பார்த்ததும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம், கொண்டஞ்சேரியை சேர்ந்த கே.ஏ.வடமலை (77), திருவொற்றியூர் வடக்குமாட வீதியை சேர்ந்த லட்சுமணன் மனைவி பத்மாவதி (58) ஆகியோர் டி.வி.யில் ஜெயலலிதா மரண செய்தியை பார்த்து மயங்கி விழுந்து இறந்தனர்.

பொன்னேரி, மேலபட்டரையை சேர்ந்த நைனியப்பன்(40), மீஞ்சூரை அடுத்த தேவதானத்தைச் சேர்ந்த தீனம்மாள்(57), திருவள்ளூரை சேர்ந்த ராகவன்(70) ஆகியோர் ஜெயலலிதா மரண செய்தியை பார்த்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி குன்னத்தூரை சேர்ந்த சுரேஷ் (24) நேற்று காலை ஜெயலலிதா இறந்த செய்தியை பார்த்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வெம்பாக்கம், தூசி அருகேயுள்ள அப்துல்லாபுரத்தை சேர்ந்த சையத்வக்த் (68), வேலூர் மாவட்டம் வல்லம் கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அறிவழகன் (60), நாச்சியார்வட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜன் (45) ஆகியோர் ஜெயலலிதா மரணம் அடைந்த தகவலை கேட்டு அதிர்ச்சியில் இறந்தனர்.

கடலூர் மாவட்டம் சோழத்தரத்தை சேர்ந்த ஆசிரியர் ஜாகீர்உசேன் (48) நேற்று முன்தினம் இரவு ஜெயலலிதா மரண செய்தியை டி.வி.யில் பார்த்ததும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

விழுப்புரம் அருகே உள்ள வெங்கந்தூர் கிராமத்தை சேர்ந்த இருசப்பன் (48), திருவெண்ணெய்நல்லூர் காரப்பட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (43), திட்டக்குடி திருவட்டத்துறையை சேர்ந்த சுப்பிரமணியம் மனைவி பூங்காவனம் (52) ஆகியோர் ஜெயலலிதா மரண செய்தியை கேள்விப்பட்டதும் அதிர்ச்சியில் இறந்தனர்.

நாகையை அடுத்த கீச்சாங்குப்பம் வியாசர் நகரை சேர்ந்த ராமன் (49) வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தபோது ஜெயலலிதா மரண செய்தியை பார்த்து அதிர்ச்சியில் இறந்தார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தை சேர்ந்த சொக்கலிங்கம் (62) ஜெயலலிதா மரண செய்தியை பார்த்து அதிர்ச்சியில் இறந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, மேலபொன்னன் விடுதி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் மகள் மனுநாயகி(25). எம்.சி.ஏ. பட்டதாரியான இவர், ஜெயலலிதா இறந்த தகவல் வெளியானதும் மயங்கி விழுந்து இறந்தார்.

கறம்பக்குடி அருகே உள்ள கணக்கண்காடு கிராமத்தை சேர்ந்த தங்கராசுவின் மனைவி பாப்பு (53), கந்தர்வகோட்டை புதுநகர் கிராமத்தை சேர்ந்த சின்னப்ப உடையார் மனைவி பொன்னம்மாள்(65), கீரமங்கலம் துரைராசு (65) ஆகியோர் ஜெயலலிதா மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் இறந்தனர்.

பெரம்பலூர் திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த ராமசந்திரன் (55) அதிர்ச்சியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். பெரம்பலூர் சங்குபேட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் (55) மயங்கிவிழுந்து இறந்தார்.

திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த ஆரோக்கியசாமி (80), கரூர் மாவட்டம், கோட்டக்கரையை சேர்ந்த முருகன் மனைவி வெள்ளையம்மாள் (42), சுல்லாமணிபட்டி குணசேகரன்(45), பெரியபனையூரை சேர்ந்த குப்பாண்டி(70), குளித்தலை மேட்டுமருதூரை சேர்ந்த முத்து(65) ஆகியோர் ஜெயலலிதா மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியில் இறந்தனர்.

சேலத்தை சேர்ந்த சரவணன்(40), தாரமங்கலம் சிக்கம்பட்டியை சேர்ந்த பழனிசாமி (48), மாணிக்கம்(82), அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் மனைவி கமலா (60) ஆகியோர் ஜெயலலிதா மரண செய்தியை பார்த்ததும் மாரடைப்பில் இறந்தனர்.

கன்னங்குறிச்சியை சேர்ந்த கோவிந்தன் (50) அதிர்ச்சியில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

காடையாம்பட்டி சந்தைப்பேட்டையை சேர்ந்த ராஜா என்பவரது மனைவி குமுதவல்லி(30), தேவூர், காவேரிப்பட்டியை சேர்ந்த பெருமாள் மனைவி அய்யம்மாள்(65) ஆகியோர் ஜெயலலிதா மறைவு செய்தியை பார்த்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தனர்.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், ஊட்டமலையை சேர்ந்த முருகேசன் (55) குடும்பத்தினர் ஜெயலலிதா மறைவையொட்டி சென்னை சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக சோகத்துடன் இருந்த முருகேசன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

காரிமங்கலம் கும்பாரஅள்ளியை சேர்ந்த சின்னசாமி (36) ஜெயலலிதா இரங்கல் கூட்டத்திற்கு மைக்செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி இறந்தார்.

மொரப்பூர் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த மணி (53), தர்மபுரி இலக்கியம்பட்டியை சேர்ந்த துரை (54) ஆகியோர் நேற்று டி.வி.யில் ஜெயலலிதா இறுதி நிகழ்ச்சிகளை பார்த்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வீரமலை அ.தி.மு.க. கிளை செயலாளர் சின்னபிள்ளை (63), சின்னகரடியூர் முன்னாள் கிளை செயலாளர் மாணிக்கம் (70), விளங்கா முடியைச் சேர்ந்த பாப்பாத்தி (60) ஆகியோர் நேற்று காலை டி.வி. பார்த்துக் கொண்டிருந்தபோது அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தனர்.

போச்சம்பள்ளி நரால்சந்தம்பட்டியைச் சேர்ந்த செல்வபாஸ்கரன் (28), பர்கூர் செக்கில்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் (62), சாமல்பட்டி அருகே உள்ள தனியார் பால் நிறுவன காவலாளி பாலசுப்பிரமணியன் (55), பர்கூர் ஒரப்பம் ஊராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் கிருஷ்ணன் (35) காவேரிப்பட்டணம் பனகமுட்லுவை சேர்ந்த மொரப்பூரான் என்பவரது மனைவி காளியம்மாள் (65) ஆகியோரும் ஜெயலலிதா மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியில் இறந்தனர்.

சிவகாசியில் இருந்து குஜராத் மாநிலத்திற்கு தீப்பெட்டி பாரம் ஏற்றிக்கொண்டு நாமக்கல் வழியாக சென்று கொண்டு இருந்த லாரி டிரைவ
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.