நியூஸ்7 தலைமை செய்தியாளர் செந்திலுக்கு நேர்ந்த கொடுமை - ஆப் கி மோடி சார்க்கார்...1 ம் தேதி சம்பளம் போட்டு விட்டார்கள்...கடந்த மாதம் முழுவதும் அலுவலகத்தில் கேண்டீன் நடத்தி வரும் அக்காவிடம் கடன் சொல்லிச் சாப்பிட்டதற்கான காசைக் கொடுக்க வேண்டும்...

நேற்றும் இன்றும் வானிலை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை. வீட்டில் இருக்கும் செல்ல மகள், அப்பா ஏதாச்சும் வேணும் சாப்பிட என்று கேட்கிறாள்...

சரி அனுமதிக்கப்பட்ட 2500 ரூபாயையாவது ஏதாவது ஒரு ஏ.டி.எம்.மில் எடுத்து விடலாம் என்று வளசரவாக்கத்தில் இருந்து நுங்கம்பாக்கம் வரை 10 க்கும் மேற்பட்ட திறந்திருந்த ( மற்ற பல ஏ.எடி.எம்.கள் மூடப்பட்டுள்ளன ) ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கச் சென்றால் பணம் இல்லை என்பதை வேறு வேறு விதமான ஆங்கில வார்த்தைகளில் வெற்றுக் காகிதங்கள் சொல்லின...

அடுத்த மாதம் ஊருக்குச் செல்ல வேண்டி இன்று காலை ரயில்வேயில் ஆன் லைன் மூலமாக ( cash less ) டிக்கட் முன் பதிவு செய்தேன். டிக்கட்டுக்கான பணம் எடுக்கப்பட்டு விட்டது...ஆனால் டிக்கட் வரவில்லை...மாறாக இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது என்று சொல்கிறது ரயில்வே.. பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான எண் மட்டும் கிடைத்தது...

ஏதாவது உதவிகள் தேவை எனில் இந்த எண்ணில் அழையுங்களேன் என்று இரண்டு எண்கள் கொடுக்கப்பட்டிருந்தன...அழைத்தேன்...அழைத்தேன்..அழைத்துக் கொண்டே இருக்கிறேன்...பதில் சொல்ல யாரும் இல்லை...

ஹிந்தியில் பதிவு செய்யப்பட்ட குரல் மீண்டும் மீண்டும் கேட்கிறது... பணம் வருமா வராதா...தெரியாது...மீண்டும் டிக்கட் புக் செய்ய வேண்டுமா தெரியாது...

சென்னை போன்ற பெருநகரத்தில் உள்ள நம்முடைய அனுபவமே இவ்வாறு எனில், சாமானியர்கள் இது போன்ற பண இல்லா பரிவர்த்தனைகளில் ஏற்படும் சிரமங்களை எவ்வாறு எதிர்கொள்வார்கள் புரியவில்லை...
வங்கிக்கு நேரில் சென்றால் பணம் கிடைக்கும் என்று நண்பர்கள் சொன்னதின் பேரில் வங்கிக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன்...

அங்காவது கிடைக்குமா அல்லது அங்கும் பணத் தட்டுப்பாடு என்று சொல்வார்களா என்ற அச்சத்தோடு...

பதிவு @ நியூஸ்7 தலைமை செய்தியாளர் செந்தில்
Demonetisation  cashless  modi
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.