சிபிஐ இயக்குனராக அஸ்தானாவை பாஜக அரசு நியமித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குசிபிஐ இயக்குனராக அஸ்தானாவை பாஜக அரசு  நியமித்ததை  எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: 9 ஆம் தேதி விசாரணை

மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனராக பதவி வகித்து வந்த அனில் சின்கா கடந்த 2–ந் தேதி பணி ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து குஜராத் பிரிவை சேர்ந்த ராகேஷ் அஸ்தானாவை இடைக்கால இயக்குனராக மத்திய அரசு நியமித்து உள்ளது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொண்டு நிறுவனம் ஒன்று பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், சி.பி.ஐ.க்கு இயக்குனரை நியமிப்பது தொடர்பாக பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோர் பங்கேற்கும் கூட்டத்தை மத்திய அரசு கூட்டவில்லை என்றும், இந்த விஷயத்தில் அரசு தன்னிச்சையாக செயல்பட்டு இருப்பதுடன், சட்டவிரோதமாகவும் இந்த நியமனத்தை செய்துள்ளது எனவும் கூறப்பட்டு இருந்தது.

அஸ்தானாவை நியமனம் செய்வதற்காகவே, இந்த பதவிக்கு நியமிக்கப்பட வாய்ப்பு இருந்ததாக கருதப்படும் ஆர்.கே.டட்டாவை உள்துறை அமைச்சக செயலாளராக வேண்டுமென்றே அரசு பணியிடமாற்றம் செய்ததாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 9) விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

Thanks To: DAILY THANTHI
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.