சிரியாவிற்கு 91 ராணுவ வீரர்களுடன் சென்ற ரஷிய ராணுவ விமானம் வெடித்து சிதறியதுசிரியாவிற்கு 91 ராணுவ வீரர்களுடன் சென்ற ரஷிய ராணுவ விமானம்  வெடித்து சிதறியது  என தகவல் வெளியாகியுள்ளது

ரஷ்யாவிலிருந்து 91 நபர்களை ஏற்றிக் கொண்டு சிரியாவிற்கு புறப்பட்ட விமான  திடீரென்று காணாமல் போனது.தற்போது. அந்த  ராணுவ விமானம் பிளாக்-சீ கருங்கடலில் (Black sea) பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது.

இன்று அதிகாலை ரஷ்யாவின் சோச்சி பகுதியில் இருந்து புறப்பட்டது Tu-154 ரக ராணுவ விமானம். புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம் மறைந்தது. இப்படி மறைந்த விமானம், சோச்சி பகுதியின் கடற்கரையில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் விழுந்து நொறுங்கி உள்ளது. அதன் பாகங்களை ரஷ்ய மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த விமானம் சிரியாவுக்கு செல்வதாக இருந்த நிலையில், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் யாரேனும் உயிர் பிழைத்தார்களா என்பது பற்றி தகவல் இல்லை. தொழில்நுட்பக் கோளாறு அல்லது மனித தவறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.