பஹ்ரினில் ஷியா தலைவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனைபஹ்ரைனின் முக்கிய ஷியா எதிர்க்கட்சியின் தலைவர் அலி சால்மானுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்ததை அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று நடத்திய மறுவிசாரணையில் உறுதி செய்திருக்கிறது.

பஹ்ரைனின் முக்கிய ஷியா எதிர்க்கட்சியின் தலைவர் அலி சால்மானுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்ததை அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று நடத்திய மறுவிசாரணையில் உறுதி செய்திருக்கிறது.

வெறுப்புணர்வை தூண்டியதாகவும், அரசை ஆயுத பலத்தால் அகற்ற அழைப்பு விடுத்ததாகவும் ஷேக் சாலமான் தண்டனை பெற்றிருக்கிறார்.

இவர் ஓராண்டுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட பிறகு, இவருடைய வழக்கு பலமுறை மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு விசாரைணையில் அவருடைய தண்டனையை இரண்டு மடங்காக்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

சுன்னி அரசு உறுதியளித்த சீர்திருத்தங்களை இன்னும் நிறைவேற்றவில்லை என்று கூறிவரும் சிறுபான்மையினரான ஷியா முஸ்லிம்களை ஒன்று திரட்டி குழப்பம் விளைவித்தார் என்பதற்காக  சால்மானுக்கு  சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.