உலகின் முதன் முதலில் ஏ டிஎம்(ATM) தோன்றிய வரலாற்று பார்வை ...
கிமு 2500ம் ஆண்டுவாக்கில், எகிப்து மற்றும் மெசபடோமியா நாடுகளில் வரிகள் வசூலிக்கும் முறையை எளிதாக்குவதற்காக,  வெள்ளி மற்றும் தங்கத்தாலான நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.பணம் கண்டுபிடிக்கப்பட்ட காலங்களில், கோயில்கள் தான் வங்கிகளாக செயல்பட்டன. கோயில்கள் புனிதமான இடம் என்று கருதப்பட்டதால், அங்கு கொள்ளைகள் நடக்காது என்பதில் மக்கள் உறுதியுடன் இருந்தனர்.பணத்தை கடன் கொடுக்கும் முறை எப்போது தொடங்கியது தெரியுமா? கிமு 1750ம் ஆண்டுகளில் பாபிலோனிய கோயில்களின் மதகுருக்கள், பணத்தை கடனாக அளிக்கத் தொடங்கினர்.
 முதன்முதலாக, தற்போதுள்ள அனைத்து கட்டுப்பாடுகளுடனும் தொடங்கப்பட்ட வங்கி, பாங்கா மாண்டே டீ பாஸ்ட்சி டீ சீனா. கிபி 1472ம் ஆண்டு இத்தாலியில் தொடங்கப்பட்ட இந்த வங்கி இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.காகிதத்தால் ஆன பணத்தை முதன்முதலில் சீனர்கள் தான் அறிமுகப்படுத்தினர். 910ம் ஆண்டு காகித பணம் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதை உலகுக்கு தெரியப்படுத்தியவர், மார்க்கோ போலோ.
 உலகின் முதல் கிரிடிட் கார்டு, டினர்ஸ் கிளப் கார்டு.  1949ம் ஆண்டு ஃபிராங்க் மெக்நமாரா என்பவர் இந்த கார்டை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.
எந்த நேரத்தில் பணம் எடுத்து கொள்ளவும், வங்கி பரிவர்த்தனைகள் செய்யும் இன்று ATM  களின் பங்கு அன்றாட வாழ்வில் முக்கியமானது. நகரங்களில் மட்டுமன்றி சிறிய ஊர்களில்ATM கள் புழக்கத்திற்கு வந்து வங்கிகளுக்கு அருகே மட்டுமின்றி வணிக அங்காடிகள், ரயில், விமான நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் புழங்கும் இடங்களிலும் உள்ளது. இன்று அன்டார்டிகாவிலும் ஒரே ஒரு ATM இருக்கிறது. உலகின் தென்கோடி ATM இதுவே ஆகும்.
 ATM கண்டு பிடித்தர் ஜான் ஷெபர்ட் பாரன். உலகின் முதல் ATMபார்க்லேஸ் (Barclays) வங்கியால் 1967 ஆம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள என்பீல்ட்டவுன் (Enfield Town) என்னுமிடத்தில் அமைக்கப்பட்டது. ஜான் ஷெபர்ட் பாரன் (John Sheperd Barron) கண்டுபிடித்த ATMஇயந்திரத்தை பற்றி அவர் கூறும்போது, காசு போட்டால் சாக்லேட் தரும் இயந்திரத்தின் இயங்குமுறையை அடிப்படையாக கொண்டேATM இயந்திரத்தை கண்டுபிடித்தாக கூறுகிறார். அப்போது PIN எண்ணை உள்ளீடும் முறை கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. முதலில் ஆறு எண்களை கொண்டு PIN எண்ணை உபயோகிக்கலாம் என நினைத்த அவர் மனைவி நான்கு எண்களுக்கு மேல் தன்னால் நினைவில் வைத்து கொள்ள முடியாது என சொன்னதால் ஷெபர்ட் நான்கு எண்களை ATM இயந்திரத்திற்கு PIN எண்ணாக வைத்தார். அதுவே இன்று உலக அளவில் எல்லா ATM இயந்திரங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. முதல் முதலில் ATM இயந்திரத்தை உபயோகப்படுத்தி பணம் எடுத்தவர். இங்கிலாந்து தொலைக் காட்சி நாடக நடிகர் ரெக் வார்னி(Reg Varney). ஒரு முறை உபயோகித்தால், 10 பவுண்ட் நோட்டு ஒன்றை மட்டுமே மெல்லிய காகித பையில் வைத்து கொடுத்தது இந்த முதல்ATM இயந்திரம்.
 உலகின் முதல் 'பிட்காயின்'- டிஜிட்டல் பணம் வழங்கும் ஏடிஎம் திறப்பு..
கனடா வான்கூவர் நகரில் உலகின் எந்த அங்கீகரிக்கப்பட்ட பணத்தாளையும் பிட் காயின்களாக (டிஜிட்டல் கரன்சி- எண்ம நாணயம்) மாற்றி கொடுக்கும் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.பொதுப்பயன்பாட்டுக்காக நிறுவப்பட்ட முதல் பிட் காயின் ஏடிஎம் இயந்திரம் இதுவாகும். இந்த ஏடிஎம் இயந்திரம் வான்கூவரைத் தலைமை யிடமாகக் கொண்டு செய ல்படும் பிட்காயினிகாஸ் நிறுவன மும், நெவேடாவைத் தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் ரோபோகாயின் நிறுவனமும் இதனைச் செயல்படுத்துகின்றன.
 வான்கூவரில் ஒரு காபிக் கடையில் இந்த ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. வான்கூவர் நகரில் 20 வர்த்தக நிறுவனங்கள் பிட்காயின்களை ஏற்றுக் கொள்கின்றன. அதில் இந்தக் காபி கடையும் ஒன்று.ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு 3,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பிட் காயி ன்களைப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர் தன் உள்ளங்கையை ஏடிஎம் இயந்திரத்தின் முன் காட்டினால் அது ஸ்கேன் செய்து கொள்ளும்.

 பிட் காயின் என்றால் என்ன?

பிட் காயின் என்பது ஒரு எண்ம நாணயமாகும் (டிஜிட்டல் கரன்சி). இதனை உருவாக்கியவர் சடோஷி நகமோட்டா.மற்ற நாணயங்கள் அல்லது நாணய முறைகளை ஏதாவது மத்திய அமைப்பு கட்டுப்படுத்தும். ஆனால், இந்த நாணயத்தை எந்த அமைப்பும் கட்டுப்படுத்தாது. இரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவதன் மூலம் இதில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.ஒரு பிட்காயினை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் மோசடி செய்ய முடியாது. ஒரே பிட் காயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது.பெரும்பாலும் பிட் காயினைப் பெறுவதற்குக் கைரேகை போன்ற அடையாளம் அவசியம் என்ற போதும், அடையாளம் காட்டாதவர் கூடப் பிட் காயினைப் பயன்படுத்த முடியும். பிட் காயின்களை தனிப்பட்டமுறையில் கணினிகளிலோ அல்லது வலைத்தளங்களிலோ சேமிக்க முடியும். பிட் காயினுக்கு எனத் தனியாகக் கணக்கு வைத்துள்ள யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.
 எந்த நாடோ அல்லது அரசாங்கமோ பிட் காயினின் மதிப்பை மாற்ற முடியாது. அதிக பிட் காயின்களை உருவாக்க முடியாது என்பதால் பணவீக்கத்தையும் உருவாக்க முடியாது.தற்போது சர்வதேச அளவில் இந்த பிட் காயின்களை பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் ஏற்றுக் கொள்கின்றன. சட்டவிரோத வர்த்தகம், போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்டவற்றிலும் இது மிகப்பிரபலமாகப் பயன்படுத்தப் படுகிறது.
 பார்வையற்றோருக்கான உலகின் முதல் ஏடிஎம் இயந்திரம்!
ஷார்ஜாவில் பார்வைக் குறைபாடு மற்றும் பார்வையற்றோருக்கான புதிய ஏடிஎம் இயந்திரத்தை அமைத்திருக்கிறது ஷார்ஜா இஸ்லாமிக் வங்கி. பார்வையற்றோருக்கு பயன்படும் விதத்தில் குரல் வழிகாட்டும் வசதியுடன் இந்த புதிய ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தில் பார்வை இல்லாதவர்கள் பயன்படுத்தும் பெரிய ப்ரெய்லி கீபோர்டு, உயர்ந்த ரிசலூசன் கொண்ட பெரிய டிஸ்ப்ளே, தடிமனமான எழுத்துக்கள், ஹெட்போன் மற்றும் ஸ்பீக்கர் போன்றவை உள்ளன. இதன் மூலம் பார்வை இல்லாதவர்கள் இந்த ஏடிஎம் இயந்திரத்தை மிக எளிதாக இயக்க முடியும். சாதாரண ஏடிஎம்களை இயக்க வேண்டும் என்றால் அந்த இயந்திரம் கேட்கும் நீண்ட வினாக்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இந்த இயந்திரத்தில் அதிகமாக கேள்விகள் வராது. பார்வை அற்றவர்கள் மிக விரைவாக இதை இயக்கும் விதத்தில் இந்த ஏடிஎம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஷார்ஜாவில் உள்ள பார்வையற்றவர்களுக்கான எமிரேட்ஸ் அசோஸியேசன் தலைமையகத்தில் இந்த புதிய ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் அங்கு இந்த புதிய ஏடிஎம் இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் பார்வை இல்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சார்ஜாவின் மன்னர் ஷேக் சுல்த்தான் பின் முகமது அல் க்வாசிமியின் கட்டளைப்படி இந்த புதிய ஏடிஎம் சர்ஜா இஸ்லாமிக் வங்கியால் நிறுவப்பட்டிருக்கிறது. நல்ல விஷயம்தான்.


இந்தியாவில் முதல் அஞ்சலகம் ஏடிஎம் சென்னையில் திறப்பு..
 இந்தியாவின் முதலாவது அஞ்சலக ஏடிஎம் மையம் சென்னையில் திறக்கப்பட்டது. தியாகராயர் நகரில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.
பொருளாதார வளர்ச்சி நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வருகிறது. வங்கிகளும் அஞ்சல் துறையும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் வங்கிகள் பெரிதும் மாற்றம் கண்டன. பெண்களுக்கென்றே தனியாக பாரதிய மகிளா வங்கியையும் மத்திய அரசு அறிமுகம் செய்தது. அஞ்சல் துறைகளில் மாற்றம் செய்திட அஞ்சலக ஏடிஎம் அமைத்திடும் பனி நடந்து வந்தது. இப்பணி முழுவதும் நிறைவுற்றநிலையில் நாட்டிலேயே முதல் அஞ்சலக ஏடிஎம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.ஏடிஎம் மையத்தை திறந்து வைத்த பேசிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூருகையில்:-  நாட்டில் ஒரு லட்சத்து 55 ஆயிரம் மையங்களில் ஐ.டி தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்படும். தகவல் தொழில்நுட்ப வசதிக்காக ரூ.4 ஆயிரத்து 909 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.