முத்துப்பேட்டை அருகே ஜெயலலிதா மறைவால் அதிர்ச்சியில் இருந்த அதிமுக கிளைச்செயலாளர் மாரடைப்பால் மரணம்!முத்துப்பேட்டை டிச.22திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த மேல நம்மங்குறிச்சியை சேர்ந்தவர் மருதன் மகன் தங்கராசு(57), இவர் அதிமுக கிளை செயலாளராக உள்ளார.; மேலும் கடந்த மூன்றுமுறை மேல நம்மங்குறிச்சி ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இந்தநிலையில் ஜெயலலிதா மறைவால் அன்றைத்தினம் முதல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் பலரிடம் அம்மா என்னை விட்டு சென்று விட்டார்களே என்று பலரிடம் புலம்பி வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் தங்கராசு அவரது உறவினர் ஒருவரிடம் ஜெயலலிதா மறைவை பற்றி புலம்பிய அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு சுருண்டு கீழ விழுந்தார். அடுத்த சில நிமிடங்களில் தங்கராசு உயிர் பிரிந்தது. அதிர்ச்சியில் இறந்த தங்கராசுக்கு பூங்கோதை(50) என்ற மனைவியும், திருமணம் ஆகிய மூகாம்பிகை(30) என்ற ஒரு மகளும், திருமணம் ஆகாத வடிவழகன்(27) என்ற மகனும் உள்ளனர்.

இந்தநிலையில் அதிர்ச்சியில் இறந்த அதிமுக கிளைச்செயலாளர் தங்கராசு உடலுக்கு முத்துப்பேட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் நடராஜன், நகர செயலாளர் மங்கள் அன்பழகன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் உட்பட கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.