கருப்பு பணம், கருப்பு சந்தை, கருப்பு தினம்…! எதற்காக கருப்பு என்று அழைக்கிறோம்?கடந்த 8 ஆம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் மக்கள் பணத்தைப்பற்றியும் கருப்பு பணம் குறித்து பேசி வருகின்றனர். டீக்கடையில் துவங்கி துணிக்கடை வரை, குப்பை அள்ளுபர் முதல் கூகுளில் வேலை செய்பவர் வரை இந்த கருப்பு பணத்தை பற்றிய பேச்சுதான் நீடிக்கின்றது.  அரசாங்கதுக்கு வரிகட்டாமல் பதுக்கி வைக்கப்பட்ட பணத்தை நாம் கறுப்பு பணம் என்கிறோம். சட்டவிரோதமாக நடைபெறும் வணிகத்தை கருப்பு சந்தை என்று அழைக்கிறோம். ஒரு மோசமான விபத்து, இயற்கை பேரழிவு நிகழ்ந்த நாளை கருப்பு தினம் என்று அழைக்கிறோம்.

இப்படி அனைத்து தவறான செயல்களையும் கருப்பு என்று ஏன் கூறுகின்றார்கள் என்று நாம் ஆராய்ந்து பார்த்தோமா? நான் தேடிப்பார்த்ததில் ஒரு மிகப்பெரிய இனத்தை ஆதிக்க வர்க்கத்தினர் எவ்வளவு கேவலப்படுத்தி வருகின்றனர் என்பது எனக்கு தெரிந்தது. RASCISM எனப்படும் இனவெறி, நிறவெறியின் காரணமாக, கருப்பின மக்களை வல்லரசுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் அழித்துக் கொண்டிருந்த நேரம். அவர்களையும் அவர்களின் நிறத்தையும் தொடர்ந்து இழிவு படுத்தி, வதைத்துக்கொண்டிருந்த ஆதிக்க வர்க்கத்தினர் அவர்களை கேவலப்படுத்த ஒரு உத்தியை கையாண்டனர்.
அதை தான் இன்று நம் மூலம் அவர்கள் நிறைவேற்றி கோண்டிருக்கின்றனர். அஃதாவது, தடை செய்யப்பட்ட, திருடப்பட்ட, கேவலமான பணத்தை, பொருளை, தினத்தை, இடத்தை கருப்பு என்று பெயர் வைத்தனர். எனவே தான் நாம் கருப்பு பணம் என்றும், கருப்பு மார்க்கெட் என்றும், கருப்பு நாள், கருப்பு பிரதேசம் என்றும் நாம் அழைத்து வருகிறோம்.

ஒரு வதைக்கப்பட்டு நிர்கதியான ஒரு இனத்தை தற்போழுது நாமும் இழிவு படுத்தி வருகிறோம். கருப்பு என்றால் அப்பிரிக்கர்கள் மட்டும் அல்ல. இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள். நமது தமிழர்களின் நிறமும் கருப்பு தானே. ஆனால் நாம் இதனை அறியாமல் நிமிடத்துக்கு ஒரு முறை கருப்பு பணம் என்று அழைத்து வருகிறோம்.

இனியாவது நமது வார்த்தைகளில் கொஞ்சம் மாற்றி ஊழல் பணம், பதுக்கல் பணம் இப்படி அழைக்கலாம். இனவாதத்தில் பங்காளிகள் ஆகாமல் இருப்போம்.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.