ஏழை முஸ்லிம் பெண்ணின் திருமணத்தை நடத்திய இந்து நண்பர்!!தெலங்கானாவில் முஸ்லிம் பெண் திருமணத்தை இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் நடத்தி வைத்திருக்கும் சம்பவம் மனிதநேயம் தழைத்தோங்கிக் கொண்டு இருப்பதைக் காட்டுகிறது.

ஹைதராபாத்தில் லாங்கர் ஹவுஸ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மசுரி. இவர்தான் தனது நண்பர்களுடன் சேர்ந்து 18 வயது முஸ்லிம் பெண்ணின் திருமணத்திற்கான செலவுகள் அனைத்தையும் செய்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். மணப்பெண்ணின் தந்தை முகம்மது சுலுமேயா தனது மகள் சுல்தானா பேகத்திற்கான திருமண ஆடையை மட்டும் எடுத்துள்ளார். மற்ற அனைத்து செலவுகளையும் ராஜேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து செய்துள்ளார்.

இதுகுறித்து ராஜேஷ் கூறுகையில், ''எனக்கு முகம்மதுவின் குடும்பம் கடந்த 2 ஆண்டுகளாக தெரியும். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். பணம் இல்லாததால் சுல்தானின் திருமணம் தள்ளிப் போனது தெரிய வந்தது. அவரது நெருங்கிய கும்பத்தினர் யாரும் உதவி செய்யும் நிலையில் இல்லை. இதை அறிந்து நான் சில முஸ்லிம் நண்பர்களுடன் இந்த திருமணத்திற்கான உதவியை செய்தேன்'' என்கிறார்.

தனது நண்பர்களிடம் ரூ. 20,000 வசூலித்து, 250 விருந்தினர்களை அழைத்து இந்த திருமணத்தை நடத்தியுள்ளனர்.

மணப்பெண்ணின் தாய் கஜாபீ கூறுகையில், ''ராஜேஷ் பாய் அளவிற்கு எங்கள் சமூகத்தில் இருந்தும் கூட எனது மகள் திருமணத்திற்கு யாரும் உதவி செய்யவில்லை. அரசு வழங்கும் திருமண உதவி திட்டத்தில் ரூ. 51.000 பெற விண்ணப்பித்துள்ளோம். ஆனால், பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. திருமணத்திற்கு மணமகனின் தரப்பில் இருந்து அவசரம் செய்தனர். இந்நிலையில் ராஜேஷ் பாய் எங்களுக்கு உதவினார்'' என்கிறார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.