நாட்டுக்காகப் போராடிய ஏழு முஸ்லிம்களும் தேசத் துரோகிகளா?பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் 1818இல் தேசத்துரோகிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட 19 சிங்களவர்கள் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இலங்கைக்காகப் போராடியவர்கள் என பிரகடனப்படுத்தப்பட்டு அவர்கள் மீதிருந்த அவப் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

நீதி, புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் சிபாரிசுக்கமையவே அரசாங்கம் ஊவா வெல்லஸ்ஸ புரட்சியின் போது தேசத்துரோகிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த 19 புரட்சி வீரர்களே இலங்கைக்காகப் போராடியவர்கள் எனப் பிரகடனப்படுத்தப்பட்டனர்.

198 வருடங்களுக்கப் பிறகு அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது பாராட்டத்தக்கது.
நாட்டுக்காகப் போராடியும் தேசத் துரோகிகளா இவ்வளவு காலமும் வரலாற்றில் பதிவாகியிருந்தார்கள். சுதந்திரம் கிடைத்த 68 வருடங்களுக்குப் பின் இவ்வாறான ஒரு சிந்தனை இந்த அரசுக்கு ஏற்பட்டது பாராட்டுக்குரியது.

இதேநேரம் 1804ஆம் ஆண்டு பிரித்தானிய அரசு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஏழு முஸ்லிம்களைத் தேசத்துரோகிகளாகப் பிரகடனஞ் செதிருந்தது.

இவர்கள் செய்த குற்றம் பிரித்தானியப் படையினர் கிழக்கு மாகாணத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின் கண்டியைக் கைப்பற்ற முயற்சித்த போது மட்டக்களப்பு ஒந்தாச்சி மடம் எனும் இடத்தில் இந்த முஸ்லிம்கள் படையைத் திரட்டி பிரித்தானியப்படையினர் முன்னேறுவதனைத் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பிரித்தானிய அரசு அதிகாரிகள் அவர்களைச் சரணடையுமாறு பணித்தனர்.
இந்த எழு முஸ்லிம்களும் சரணடையாது தலைமறைவாகினர். இவர்கள் பற்றிய செய்தி எமது பத்திரிகையின் முதற்பக்கத்தில் வெளிவந்துள்ளது.
முஸ்லிம்கள் நாட்டுக்காக அன்று செய்த தியாகத்தையே இச்சம்பவம் உணர்த்துகின்றது. இவர்கள் பற்றிய விபரங்கள் வரலாற்று நூல்களிலுள்ளன.

ஆனால் நீதி அமைச்சர் இந்த முஸ்லிம் வீரர்களை உள்வாங்கத் தவறியது ஏன் என்ற கேள்வி முஸ்லிம் தரப்பில் எழுப்பப்படுகின்றது.
தாய் நாட்டைப் பாதுகாப்பதற்காக அன்று துணிந்து போராடிய இவர்களும் தேசிய வீரர்களே, மீரா ஒசன் அபூபக்கர், ஒசன் லெப்பை உதுமாலெப்பை, அபூபக்கர், ஈஸா முகாந்திரம், அனீஸ் லெப்பை, சேகுதீதி, பீர் முஹம்மத் மௌலவி, சலாம்பதி உடையார் ஆகிய ஏழுபேரும் இன்றும் நாட்டுக்குத் துரோகஞ் செதவர்களாகவே கருதப்படுகிறார்கள்.
இந்த ஏழு முஸ்லிம்கள் மீதும் ஏகாதிபத்தியவாதிகள் சுமத்திய அவப் பெயரை நீக்கி தன் நாட்டுக்காகப் போராடிய வீரர்கள் வரிசையில் உள்வாங்குவதற்கு நீதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசின் முஸ்லிம் தலைவர்கள் இதற்கான அழுத்தத்தைக் கொடுக்க முன் வரவேண்டும் என முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்றது.

Ameen Nm with Aadhil Ali Sabry at Navamani Newspaper.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.