மோடியை விளாசிதள்ளிய கர்நாடக முதல்வர் சித்தராமையாபிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கப்படாதது கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிரானது என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

இந்திரா காந்தியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய சித்தராமையா இவ்வாறு தெரிவித்தார்.

கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுவதால், தேசிய பேரிடர் நிவாரண நிதி மூலம் கர்நாடக மாநிலத்திற்கு 4,700 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று கூறிய சித்தராமையா, இதுகுறித்து பிரதமரை சந்தித்துப் பேச நேரம் கேட்டும் இதுவரை ஒதுக்காமல் புறக்கணிக்கப்படுவதாகவும் வேதனையுன் குறிப்பிட்டார்.

ஒரு முதலமைச்சருக்கு நேரம் ஒதுக்காத பிரதமரின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது என்றும் விமர்சித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.