மதவெறி கூட்டத்திடமிருந்து தமிழகத்தின் அமைதியை பாதுகாக்க அனைவரும் தயாராவோம்.!மதவெறி குள்ளநரிக் கூட்டம் குளிர்காய தயாராவது போன்றே தெரிகிறது – அதிமுக நிர்வாகிகள் விழிப்போடு இருக்க வேண்டும்.!- தெகலான் பாகவி.
தமிழக முதல்வர் உடல்நல பிரச்சினையால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்பது போன்றும், மத்திய பாதுகாப்பு படை தமிழகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், நேற்றிலிருந்து செய்திகள் பரப்பப்படுகிறன. இதற்கு ஒரு பின்ணணி இருப்பதாகவே கருதுகிறேன்.

தமிழக காவல்துறையோ, அமைச்சர்களோ, முதல்வரின் துறை பொறுப்பை வகிக்கும் ஓ. பன்னீர் செல்வம் அவர்களோ, உள்துறை மற்றும் தலைமை செயலாளரோ அதிகாரப்பூர்வமாக இதுபற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்காத நிலையில், எங்கிருந்து இந்த செய்தி பரப்பப்படுகிறது ?.

தமிழகத்தில் பெரும்பான்மை பலமுள்ள ஒரு அரசு இருக்கிறபோது, மத்திய அரசின் தேவைக்கு அதிகமான தலையீடுகளையும், மத்திய அமைச்சர்கள் மற்றும் ஆளுநரை முன்னிலைப் படுத்துவதையும் பார்க்கும்போது, மதவெறி குள்ள நரிக் கூட்டம் குளிர்காய தயாராவது போன்றே தெரிகிறது. அ.தி.மு.க.வின் நிர்வாகிகள் விழிப்போடு இருக்க வேண்டிய தருணம் இது.

காவிரி, மீத்தேன், ஜல்லிக்கட்டு உட்பட அனைத்து விசயங்களிலும் அவசரம் காட்டாத மத்திய அரசு, இப்போது தேவைக்கு அதிகமாக அவசரம் காட்டுவதுதான் குள்ளநரித்தனம் என எண்ணத் தோன்றுகிறது.
தமிழகத்தின் மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் விழிப்போடு இருக்க வேண்டிய நேரம் இது எனக்கருதுகிறேன்.
தமிழகத்தின் அமைதியை பாதுகாக்க அனைவரும் தயாராவோம்!

தெகலான் பாகவி
மாநில தலைவர்
ச்டபி கட்சி.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.