ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு சர்வதேச கூட்டணி ஆதரவு – அர்தூகான் குற்றச்சாட்டுசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு சர்வதேச கூட்டணி ஆதரவு அளித்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ள துருக்கி ஜனாதிபதி ரஜப் தய்யுப் அர்தூகான், இதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நேற்று அங்காராவில் கினிய ஜனாதிபதி ஆல்ஃபா காண்டே உடன் நடாத்திய இருதரப்பு பேச்சுவார்த்தையை அடுத்து, இரு நாட்டு தலைவர்களும் இணைந்து நடாத்திய செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய அர்தூகான், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தமது நாடு முன்னெடுத்து வரும் “தர் உல் புறாத்” இராணுவ நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.

சிரிய நெருக்கடிகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அர்தூகான், சிரியாவில் அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை முதல் கட்டமாக துருக்கி, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்தில் நடாத்தப்படும். இதில், கிளர்ச்சியாளர்கள், சவுதி, கட்டார் உள்ளிட்ட நாடுகளும் பங்கு கொள்ளும் என தெரிவித்தார்.
 (ம|நு)

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.