இவர்களை குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக அழைக்கவும்.கொலை சம்பவமொன்றுடன் தொடர்புடைய பெண்ணொருவர் உட்பட சந்தேகநபர்கள் இருவரை கைது செய்வதற்காக காவற்துறையினர் பொதுமக்களிடன் உதவி கோரியுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 12ம் திகதி வெயங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக குறித்த இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண் சந்தேகநபரின் கள்ளக்காதலி என தெரியவந்துள்ளது.

வெயங்கொடை மொட்டுன்ன பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபருக்கு வயது 29 ஆகும்.

அதேபோல் , வெயங்கொடை கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண்ணிற்கு வயது 30 ஆகும்.

இவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் வெயங்கொடை காவற்துறையின்  033 2287222 / 033 2287223  என்ற இலக்கங்களுக்கோ அல்லது 071 8591624 என்ற இலக்கத்திற்கு அழைத்து வெயங்கொடை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவிக்குமாறு காவற்துறை தலைமையகம் அறிக்கை வௌியிட்டு தெரிவித்துள்ளது
நண்பர்களுடன் பகிர:


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.