முத்துப்பேட்டை அருகே தீவிபத்து! இரண்டு வீடுகள் எரிந்து சாம்பல்!!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கரைதிடல் கிராமத்தை சேர்ந்தவர் இராமச்சந்திரன் மகன்கள் வாசு(48), வீராசாமி(45) இருவரது குடிசை வீடுகளும் அருகருகே உள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை மின் கசிவின் காரணமாக வீராசாமி வீட்டு கூரையில் தீபிடித்தது. இதனைக்கண்ட குடும்பத்தினர் தீயை போராடி அணைக்க முயற்சித்தனர் முடியவில்லை அதற்குள் தீ மளமளவென்று பரவி அருகே இருந்த அண்ணன் வாசு வீட்டின் மீதும் தீபிடித்து எரியத்துவங்கியது. இதையடுத்து முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். அதற்குள் இருவரது வீடுகள் முழுவதும் எரிந்து சாம்பலாகியது. இதில் இருவரது வீடுகளில் இருந்த அணைத்து பொருட்களும் உடைகளும் முக்கிய ஆவணங்களும் எரிந்து நாசமானது. மேலும் அப்பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன தீவிபத்து ஏற்பட்டதும் அதர்ச்சி அடைந்த அந்த குடிசை வாசிகள் முன் எச்சரிக்கையாக அவரவர் வீடுகளின் கூரை மீது தண்ணீரை ஊற்றி ஈரமாக்கினர். அதனால் பெரும் தீவிபத்து தவிற்க்கப்பட்டது. இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.